![]() "Kanavu Thozhil Salai" as your Homepage பிலிப்பைன்சில் நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்சின் மின்டானோ தீவில் டாவோ என்ற இடத்தில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தேசங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. மலேசியாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற 5 ஆப்கானிஸ்தான் வாலிபர்கள் கைது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு செல்ல இருந்த விமானத்தில் 6 வாலிபர்கள் மலேசியாவிற்கு செல்ல நேபாள நாட்டு பாஸ்போர்ட்டுடன் வந்தனர். இவர்களது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது நேபாள நாட்டின் வேறு ஒருவருடைய பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்றி 5 வாலிபர்கள் செல்வதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது 5 பேரும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை போலி பாஸ்போர்ட்டில் அழைத்து செல்ல முயன்றவர் நேபாள நாட்டு வாலிபர் என்றும் தெரியவந்தது. உடனே 6 பேரும் விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். ![]() குஜராத்தில் ஜீப் மீது டேங்கர் லாரி மோதல்: 10பேர் பலி குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே ஜீப் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10பேர் பலியானார்கள். இந்த விபத்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சேன்அன்ட்-விராம்காம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. விராம்காம் நோக்கி சென்ற டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஜீப் மீது மோதியது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நான்கு பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 2பேர் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். அவர்மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். தெலுங்கானா பகுதி மாணவர்கள் கடும் எச்சரிக்கை தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று மஹா கர்ஜனை என்ற பெயரில் பிரமாண்ட பேரணி நடத்தினர். நக்சலைட் ஆதரவாளரான கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கானா ஆதரவு இயக்கத்தினரும் பேரணியில் பங்கேற்று பேசினார்கள். தனி தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்காவிட்டால் ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சி அலுவலகங்களை தகர்த்து தரைமட்டமாக்குவோம் என்று கூட்டத்தில் பேசிய மாணவர் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர். ![]() இந்திய-இலங்கை-வங்கதேச முத்தரப்பு தொடர்: இன்று இலங்கை-வங்கதேசம் மோதல் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் இன்று வங்கதேசத்தில் துவங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் வங்கதேச அணி, இலங்கையை சந்திக்கிறது. மிர்புரில் நடக்கும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இரு அணிகளுமே நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தவிக்கின்றன. வங்கதேச அணியில் மொர்டசா, நஸ்மல் ஹொசைன் காயம் காரணமாக இடம் பெற இயலவில்லை. இவர்கள் இல்லாததால் அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமடைந்துள்ளது. அதேபோன்று ஜெயசூர்யா, முரளிதரன் போன்ற வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் இலங்கை அணிக்கு இது ஒரு சோதனை தொடர். சொந்த மண்ணில் விளையாடுவது வங்கதேசத்துக்கு மிகப் பெரும் பலம். மும்பையில் விமான ஊழியர்கள் 15 மணி நேரம் சிறைபிடிப்பு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லிக்கு வந்தது. ஆனால் பனி மூட்டம் காரணமாக மாலையில் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் இரவு 9 மணிவரை டெல்லிக்கு புறப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க மறுத்ததுடன் கேபினுக்குள் இருந்த விமான ஊழியர்களை வெளியேற விடாமல் சுமார் 15 மணி நேரம் விமானத்தில் சிறைபிடித்தனர். இதன் பின்னர், ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விமான ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் பின் நேற்று பிற்பகலில் அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. ![]() ஆந்திராவில் பந்த் காரணமாக சென்னையிலிருந்து பஸ்கள் ரத்து ஆந்திராவில் இன்று 'பந்த்' அறிவிக்கப் பட்டுள்ளதால், நேற்று மாலை முதல் சென்னையில் இருந்து அங்கு செல்லும் சில பஸ்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. சென்னை கோயம் பேட்டில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.,) மூலம் திருப்பதி, நகரி, சித்தூர் உள்ளிட்ட இடங்களுக்கும் நாள்தோறும் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆந்திராவில் இன்றும் 'பந்த்' அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், அங்கு செல்லும் அரசு பஸ் கள் உள்ளிட்ட வாகனங்கள், பயணிகளின் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ் நிலை உருவாகியுள் ளது. இதைக் கருத்தில் கொண்டு, நேற்று மாலை முதல் சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. போட்டி நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி டெஸ்ட் போட்டிகள் நாக்பூர் மற்றும் கொல்கத்தாவில் நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கான்பூர், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கின்றன. போட்டி நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ![]() ஜார்க்கண்ட் சபாநாயகர் 6ம் தேதி தேர்வு ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரன் தலைமையிலான கூட்டணி பதவியேற்ற பின், இன்று முதல் சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது. கடந்த 11 மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி நடந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து, சிபுசோரன் தலைமையில் ஐந்து கட்சிக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அவருடன் இப்போதைக்கு பா.ஜ., சார்பில் ரகுபர் தாசும், ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் தலைவர் சுதேஷ் மாத்தோ இருவரும் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில், சிபுசோரன் தலைமையிலான ஆட்சியின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. க்ஷதற்காலிக சபாநாயகராக தெக்லல் மாத்தோ நேற்று முன்தினம் பொறுப் பேற்றுள்ளார். சபாநாயகருக்கான தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. 7ம் தேதி சிபுசோரன் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கிறார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க் கள் இன்று உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். உ.பி.யில் கடும்குளிருக்கு மேலும் 33 பேர் பலி: சாவு எண்ணிக்கை 74 ஆக உயர்வு உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரம் முழுவதும் கடுமையான குளிர் வீசி வருகிறது. இந்த கடும் குளிர் காரணமாக நேற்று 41 பேர் உ.பி.யில் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் மேலும் 33 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதனால் குளிரால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்தது. இன்று மிர்சாபூர் பகுதியில் 6 பேரும் பாலியா, பாண்டா ஆகிய இடங்களில் தலா 5 பேரும், கான்பூரில் 4 பேரும், முசாபர் நகரில் 3 பேரும் பலியானார்கள். இது தவிர சன்பாத்ரா, ஹமீர்பூர், பதேபூர், சந்தாலி, பருக்காபாத், உன்னாவ் ஆகிய பகுதிகளில் 10 பேரும் குளிர் காரணமாக உயிரிழந்தனர். இன்றைய செய்திப் புகைப்படங்கள் ![]() ![]() ![]() ![]() ![]() அல்-குவைதா மிரட்டல்: ஏமன் நாட்டில் அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்கள் மூடல் ஏமன் நாட்டிற்கு அல் - குவைதா பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து, அங்குள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன. ஏமன் நாட்டில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அல் - குவைதா பயங்கரவாதிகளை ஒழிக்க, அந்நாட்டிற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் உதவி செய்வதாக தெரிவித்தன. இந்நிலையில், கடந்த டிச., 25ல் அமெரிக்க விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முற்பட்ட நைஜீரிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அந்த வாலிபர் அல் - குவைதா பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றது தெரிந்தது. அமெரிக்காவை ஆதரிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதையடுத்து, ஏமனில் உள்ள தங்களது தூதரகங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் நேற்று மூடிவிட்டன. இதையடுத்து, அங்குள்ள தங்களது நாட்டு மக்களை பாதுகாப்புடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளன. மும்பை தாக்குதலில் தீவிரவாதி ஹெட்லிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக தகவல் அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்களான டேவிட் ஹெட்லி மற்றும் ரானா ஆகிய இரண்டு தீவிரவாதிகளை அமெரிக்க புலனாய்வு துறை (எப்.பி.ஐ.) அதிகாரிகள், சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். மும்பை தாக்குதலில் ஹெட்லிக்கு உள்ள தொடர்பு குறித்து ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், அவனது முன்னாள் மனைவி பைசா குதல்காவிடம் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் ஹெட்லிக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. ![]() ![]() ![]() ![]() ![]() மேலும், இன்றைய செய்திப் புகைப்படங்களுக்கு கீழே உள்ள புகைப்படத்தை "க்ளிக்" செய்யவும் ![]() விருதுநகரில் மோசடி செய்த மூன்று பேரின் ரூ. 1.25 கோடி சொத்துக்கள் முடக்கம் விருதுநகரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 பேரின் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப் பட்டுள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஜெயக்குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: விருதுநகரில் கோல்ட் பவர் மார்க்கெட்டிங் (பி) லிட்., என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திய 4 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டி திரும்பப் பெறாமல் இருப்பதாக இதுவரை 5,942 பேர் அடங்கிய 1,052 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவர்கள் நிதி நிறுவனத்தில் 19 கோடி ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர். தலைமறைவான ஜான்சிராணியைத் தேடி போலீசார் மூணாறு சென்றுள்ளனர் என்றார். நாடு முழுவதும் 2 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி: பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல் நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் `சர்வ சிக்ஷ அபியான்' திட்டத்துக்காக தேர்வான துணை நிலை ஆசிரியர்களின் பணி திருப்தியாக இல்லை என்றும் பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. இன்று முதல் ஸ்டிரைக் : துறைமுக ஊழியர்கள் அறிவிப்பு ஊதிய உயர்வுகோரி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக துறைமுக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதிலும் உள்ள 12 துறைமுகங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் பணியாளர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவக்கினால், நாள் ஒன்றிற்கு அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. பெரு நாட்டில் முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை மனித உரிமைகளை மீறிய குற்றத்துக்காக பெரு நாட்டின் முன்னாள் அதிபர் பியூஜிமோரிக்கு ஐகோர்ட்டு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 1992-ம் ஆண்டு அவர் அதிபராக இருந்தபோது, பத்திரிகையாளர்களையும் வர்த்தக பிரமுகர்களையும் கடத்தியது தொடர்பாகவும், கொலைகள் செய்ய உத்தரவிட்டதற்காகவும் அவருக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் இருப்பதால், சுப்ரீம் கோர்ட்டு இந்த தண்டனையை உறுதி செய்தது. தெலுங்கானா விவகாரம் குறித்து இன்று அறிக்கை தாக்கல் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திராவில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு குறித்த அறிக்கையை ஆந்திர கவர்னர் நரசிம்மன், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். ஐதராபாத்தில் 144 தடைச்சட்டம் அமலில் உள்ளதால் மாணவர்கள் நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். தடையை எதிர்த்து மாணவர்கள் சார்பில் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், பல்வேறு நிபரந்தனைகளுக்குப் பிறகு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சட்ட ஒழுங்கு குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது, ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரத்தின் பிடியில் இருந்து அறிவியல் அறிவை விடுவிப்பது அவசியம்: மன்மோகன்சிங் திருவனந்தபுரத்தில் `97-வது இந்திய அறிவியல் மாநாடு' தொடக்க விழா இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய அறிவியல் துறையில் சர் சி.வி.ராமன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு பிறகு அரசியல் தலையீடு அதிகமாக இருப்பது துரதிர்ஷ்டவசமான உண்மை. இந்திய அறிவியல் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பாக பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு அரசியல் தலையீடு ஒரு தடையாக இருக்கிறது. 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வெங்கட்ராமன், `உள்ளூர் அரசியல்வாதிகளிடம் இருந்து இந்திய விஞ்ஞானிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்` என்று கூறினார். அது முற்றிலும் உண்மை. அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் பிடியில் இருந்து இந்திய அறிவியலை விடுவிப்பது மிகவும் அவசியம் என்று கூறினார். ஆந்திராவில் இன்று பந்த் தனி தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று பந்த் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டுக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரயில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் அனைத்துக் கட்சி கூட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்சில் படகு கவிழ்ந்த விபத்தில் 25 பேர் மாயம் பிலிப்பைன்ஸ் நாட்டின் பட்னகாஸ் நகரில் இருந்து 88 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த எம்வி பலோனா-9 என்ற சொகுசுப் படகு தெற்கு மணிலா அருகே கவிழந்து விபத்துக்குள்ளானது. அதிரடி மற்றும் மீட்புப்படையினரின் துரித செயலால் 63 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 25 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 1987ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் கப்பல் ஆயில் டேங்கருடன் மோதிய விபத்தில் 4 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் இருபத்தி ஏழாம் நாள் அண்மை செய்திகள் |