|
என்னைப் பற்றி வெளியான கிசுகிசுக்களை அசைபோடுவேன் -நமீதா ![]() எனது
கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்
படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். வணிக ரீதியான
வெற்றிக்கு எனது பாத்திரம் உதவும் என
தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். அதனால் தான்,
என்னை தங்களது படங்களில் அவர்கள் இணைத்துக்
கொள்கின்றனர் என நினைக்கிறேன். வித்தியாசமான
கதைகளில் நடிக்கவேண்டும் என்பது எனது ஆசை.
அதனால்தான் பச்சக்குதிரயில் நடித்தேன். அந்தப்
படம் வெற்றி பெற்றிருந்தால், விதவிதமான நமீதாவை
ரசிகர்கள் பார்த்திருக்கலாம். இப்போதும் எனக்கு
அந்த ஆர்வம் இருக்கிறது. எங்கு போய்விடப் போகிறது
காலம், பொறுத்திருந்து
விளாசுவோம். கன்னடம், மலையாளம் படங்களில்
வாய்ப்புகள் வருகின்றன. வரும் அனைத்தையும் நான்
ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், அதனால் ஏற்படும்
தாமதத்தால், தமிழக இளசுகளை தவிக்க வைக்க மனசு
இடம்தரவில்லை. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என
பெயர் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது, எனக்கு
நன்றாகவே தெரியும். டைரக்டர் பிரமோத்
இயக்கும் மலையாளப் படம் ஒன்றில், ஒப்பந்தம்
ஆகியிருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம்
வாய்ந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட்டில்
துவங்குகிறது. இந்தப் படத்துக்குப் பின், மலையாளத்
திரையுலகில் ஹீரோயின்களின் சம்பளம் பல மடங்கு
உயரும் என நம்புகிறேன். மனதிற்கு சோர்வாக
இருக்கும்போது, என்னைப் பற்றி வெளியான
கிசுகிசுக்களை அசைபோடுவேன். உண்மையை
சொல்லப்போனால், உடனடி புத்துணர்வு வழங்கும்
நிவாரணி எனக்கு வேறு எதுவுமில்லை. சென்னை வந்ததும்
நான் முதலில் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தை,
வணக்கம் அண்டு மச்சான். |