"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தேர்தல் டிக்கெட் மறுப்பு
எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை
நடிகை நக்மா பேட்டி




மும்பை,ஏப்.3-

மும்பை வடமேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட நடிகை நக்மா விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக, குருதாஸ் காமத் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது, `நான் வேட்பாளராக நிறுத்தப்படாதது, எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. கடைசிவரை நான் பரிசீலிக்கப்பட்டேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது` என்று நக்மா கூறினார்.

`மும்பைக்கு வெளியே வேறு தொகுதி அளிக்க காங்கிரஸ் முன்வந்ததா?' என்ற கேள்விக்கு நக்மா பதில் அளிக்க மறுத்து விட்டார். `தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?' என்ற கேள்விக்கு `இன்னும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. சில நாட்களில் பிரசாரம் தீவிரம் அடையும்' என்று நக்மா கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections