நாய் விரட்டியதால் மாடியில் இருந்து குதித்த சிறுவன் பரிதாப சாவு அபார்ட்மென்டில் பயங்கரம் ![]() சென்னை, மார்ச் 30:- நாய் விரட்டியதால் பயத்தில் மாடியில் இருந்து குதித்த 6ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான். மீனம்பாக்கம் இந்தியன் ஏர்லைன்ஸ் குடியிருப்பில் வசிப்பவர் சீனிவாசன். இவரது மகன் ஆசிப் அரவிந்த் (11). அதே பகுதியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்தான். தேர்வில் தேர்ச்சி பெற்று 7ம் வகுப்பு செல்ல இருந்தான். அதே குடியிருப்பில் 3வது மாடியில் வசிப்பவர் சமீதா நாயக். விமான பணிப்பெண். இவர், வீட்டில் டாபர்மேன் நாய் வளர்க்கிறார். பள்ளி விடுமுறை என்பதால், மொட்டை மாடியில் நண்பன் பிரகாசுடன், நேற்று முன்தினம் அரவிந்த் விளையாடிக் கொண்டிருந்தான். பிரகாசின் தாயும் அங்கு இருந்தார். அப்போது, சமீதா வீட்டில் இருந்த நாய் திடீரென மொட்டை மாடிக்கு வந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை விரட்டத் தொடங்கியது. பயந்துபோன பிரகாஷ், ஓடிச் சென்று தாய்க்கு பின்னால் ஒளிந்து கொண்டான். அரவிந்தை நாய் துரத்தியது. பயத்தில் அலறிய அரவிந்த், நாயிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டான். இதில் படுகாயம் அடைந்த அரவிந்தை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அரவிந்த் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து, மீனம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சமீதா நாயக்கை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவன் அரவிந்தனின் இரு கண்களையும் அவனது பெற்றோர் தானமாக வழங்கினர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |