"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"தைரியசாலியான என் மகனை பற்றி பெருமைப்படுகிறேன்" -ஜெயிலில் வருண்காந்தியை சந்தித்தார், மேனகா காந்தி!.




பிலிபிட், மார்ச்.29-

ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வருண்காந்தியை அவருடைய தாயார் மேனகா சந்தித்து பேசினார். தைரியசாலியான தனது மகனைப்பற்றி பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக வருண்காந்தி போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வருண்காந்தி நேற்று கைது செய்யப்பட்டார்.

திரளான பா.ஜனதா தொண்டர்களுடன் அவர் ஊர்வலமாக சென்றபோது கலவரம் வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் பலர் காயம் அடைந்தனர். கைதான வருண்காந்தி, கோர்ட்டு உத்தரவுப்படி, 30-ந் தேதி வரை பிலிபிட் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில், வருண்காந்தியை அவருடைய தாயார் மேனகா சந்தித்து பேசினார். முன்னதாக, நிருபர்களுக்கு பேட்டி அளித்த மேனகா, தனது மகன் வருண்காந்தி தைரியசாலி என்றும், அவரைப்பற்றி பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections