"6 அடி உயர ஆல்கஹால்" நடிகை நமீதாவுக்கு புதிய பட்டம் சினிமா பட விழாவில் வழங்கப்பட்டது ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() சென்னை, மார்ச் 28- புதுமுகங்கள் பாலா-விசாகா ஜோடியாக நடிக்க, "வைகை" என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். 1985-ம் ஆண்டு மதுரை அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வெளியிட, நடிகை நமீதாவும், டைரக்டர் ஜெயம் ராஜாவும் பெற்றுக்கொண்டார்கள். இந்த பட விழாவில், சினிமா பிரபலங்களுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்டார்கள். விழாவில் ராம.நாராயணனுக்கு, `எளிமையின் சின்னம்' என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள். நடிகை நமீதாவுக்கு, `6 அடி உயர ஆல்கஹால்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், மனோஜ்குமார், ஹரிராஜன், அழகன் தமிழ்மணி, விஜயமுரளி, டைரக்டர் ராதாபாரதி, வசனகர்த்தா ஈ.ராமதாஸ், நடிகர்கள் விஜயகுமார், உதயா, கஞ்சா கருப்பு, ஷியாம் கணேஷ், இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி ஆகியோர் கலந்துகொண்டார்கள். அனைவரையும் பட அதிபர் குமரன் வரவேற்றார். டைரக்டர் சுந்தரபாண்டி நன்றி கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |