ஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜா போட்டி!. தெலுங்கு தேசம் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!. ![]() ![]() ![]() ஐதராபாத், மார்ச்.26- ஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 91 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுதியில் அவர் போட்டியிடுவது இது 4-வது தடவை ஆகும். வேட்பாளர் பட்டியலில் கட்சியின் மகளிர் அணி தலைவி நடிகை ரோஜாவின் பெயரும் இடம் பெற்று உள்ளது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |