இங்கிலாந்து பாராளுமன்றத்துக்குள்ளேயே பெண்ணுடன் செக்ஸ் உறவு!. எம்.பி.மீது புகார்!. ![]() லண்டன், மார்ச்.26- இங்கிலாந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்துக்குள்ளேயே ஒரு பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்தார் என்றும், அதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அந்த நாட்டு பத்திரிகை ஒன்று குற்றஞ்சாட்டி உள்ளது. அந்த எம்.பி பெயர் நீகெல் கிரிபித்ஸ். 53 வயதான அவர் ஒரு பெண்ணை பாராளுமன்றத்துக்குள் கடத்திக்கொண்டு போய் அவருடன் செக்ஸ் உறவு கொண்டார். போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவு தினம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது. நள்ளிரவில் தன் அலுவலக அறையில் உள்ள சோபாவில் ஒரு மணிநேரத்துக்கு உல்லாசமாக இருந்தார். அதோடு சில போட்டோக்களையும் அது வெளியிட்டு உள்ளது. இந்த எம்.பி. முன்னாள் மந்திரி ஆவார். அவர் பிரதமர் கார்டன் பிரவுனின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்த புகார் பற்றி அந்த எம்.பி.யிடம் கேட்டபோது, இது அனைத்தும் கட்டுக்கதை என்று அவர் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |