"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

நேப்பியரில் நாளை 2வது டெஸ்ட்: ஆடுகளம் மீது நியூசிலாந்து பயிற்சியாளர் அதிருப்தி




நேப்பியர், மார்ச் 25-

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நேப்பியர் மெக்லீன் பார்க் மைதான ஆடுகளம் குறித்து, நியூசி. பயிற்சியாளர் ஆண்டி மோல்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

முதலில் நடந்த "டுவென்டி-20' போட்டிகளில் போராடி தோற்றது. அடுத்து நடந்த ஒரு நாள் தொடரை இந்திய அணியினர் 3-1 என அபாரமாக வென்றனர். தற்போது நடக்கும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. நாளை இரண்டாவது டெஸ்ட் நேப்பியர் மைதானத்தில் துவங்குகிறது.

நேப்பியர் ஆடுகளத்தின் மேற்பரப்பில் பாசி பிடித்து புற்கள் அழுகிய நிலையில் இருந்ததால், 3 அடிகள் தள்ளி புதிய ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டி நடந்த ஆடுகளத்தின் பாதி சேர்ந்துள்ளது.

இந்த புதிய ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு அவ்வளவாக ஒத்துழைக்காது என கூறப்படுகிறது. இதற்கு நியூசி. அணி பயிற்சியாளர் மோல்ஸ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:

முதல் டெஸ்டில் வென்று இந்தியா முன்னிலை வகிப்பதால், நியூசிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசையை சமாளிக்க, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அவசியம்.

ஆனால், இப்போது தயார் செய்யப்பட்டுள்ள ஆடுகளத்தின் ஒரு பாதி மிகவும் உலர்ந்து காணப்படுகிறது. இதனால் பந்து அதிகமாக சுழன்று திரும்பும். இந்திய அணிக்கே அது சாதகமாக அமையும்.

இவ்வாறு மோல்ஸ் கூறியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

கடந்த 41 ஆண்டுகளாக, நியூசி மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் தவித்து வரும் இந்திய அணி, டோனி தலைமையில் இம்முறை சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



இதற்கான பயிற்சியின் போது சச்சின் கூறியது:

இதற்கு முன்பு நியூசிலாந்தில் நடந்த தொடர்களில் நானும், டிராவிட்டும் கலந்து கொண்டுள்ளோம். ஆனால் அணி சிறப்பாக செயல்பட்டதில்லை. இப்போதைய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகிறது.இதில் நானும். டிராவிட்டும் உள் ளோம் என்பது மகிழ்ச்சி. இது இந்திய கிரிக் கெட்டுக்கு பிரகாசமான காலம். தற்போது பெற்று வரும் வெற்றிகளால், எல்லோரும் மிகுந்த திருப்தியாக இருக்கலாம். உலகின் எங்கு சுற்றுப்பயணம் செய்தாலும் இதுபோன்ற வெற்றியை பெறவிரும்பினோம். கடந்த பல ஆண்டுகளாக அது நிறைவேறி வருகிறது. அது இங்கும் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி "ஆல்-ரவுண்டர்' திறமை போல், தொடர்ந்து வெளிப் பட்டு வருகிறது. நாங்கள் சாதனையை படைக்க விரும்பினோம். அதற்கு இந்த வெற்றி தேவைப்பட்டது.

கடந்த 2001 ல் ஜிம் பாப்வேக்கு எதிராக, நீண்ட இடைவெளிக்கு பிறகு வென்றோம். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ், பின் இங்கிலாந்து சென்று வெற்றி பெற்றோம்.பின்னர் தென் ஆப்ரிக்கா சென்று வென்றோம். ஆஸ்திரேலியாவிலும் அசத்தினோம். அதாவது எங்கள் அணி எங் கெல்லாம் செல்கிறதோ, அங்கு ஆழமான விளைவுகளை ஏற்படுத்துவோம். அப்படித்தான் இங்கும் செய்து வருகிறோம். இதற்காக எங்கள் அணியினர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தற்போதைய நியூசிலாந்து பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அடுத்து வர இருக்கும் 2 டெஸ்ட் போட்டியின் மீது கவனம் செலுத்த உள்ளோம். ஒருவேளை டெஸ்ட் தொடரில நாங்கள் வென்றுவிட்டால், முன்பு முடிந்த தொடர் களை விட, இந்த தொடர் தான் சிறப்பான பயணமாக அமைந்து விடும்.மகிழ்ச்சி தரும்: இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் சிறப்பாக இருக்கும்.அதிலும் பிற இடங் களை விட மும்பையில் விளையாடுவது எனக்கு அதிக உற்சாகம் தரும். கடந்த ஆண்டை போல இம்முறையும் மக்கள் இந்த போட்டிகளை விரும்புவார்கள்.

ஆனால் நீண்ட நியூசிலாந்து தொடருக்கு பிறகு, மீண்டும் 45 நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது அணியில் இருக்கும் எல்லோருக்கும் கடினம் தான். ஆனால் மக்கள் ஐ.பி.எல்., தொடரை காண ஆவலாக உள்ளனர். இது துவங்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections