உயிருக்கு போராடும் டி.வி.நடிகை ஜேட் கூடியின் கடைசி ஆசை நிறைவேறுவதில் சிக்கல் ![]() லண்டன், மார்ச்.22- பிரபல இங்கிலாந்து டி.வி. நடிகை ஜேட் கூடி, புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் உள்ளார். தான் இறந்த பின் தனது கடைசி ஆசையான எசக்ஸ் நகரில் உள்ள செயின்ட் ஜான் தி பாப்டிஸ்ட் தேவாலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் தன்னை அடக்கம் செய்யும்படி அவர் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆசை நிறைவேறுமா என்பதில் கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் இந்த கல்லறைத் தோட்டம் ஏற்கனவே நிரம்பி விட்டது. இது குறித்து ஜேட் கூடியின் செய்தி தொடர்பாளர் மாக்ஸ் கிளிப்போர் கூறுகையில், `ஜான் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டம் முற்றிலுமாக நிறைந்து உள்ளது. எனவே அங்கு ஜேட் கூடியை அடக்கம் செய்வது சிரமம். அதனால் அவரை அடக்கம் செய்ய விரும்புகிறவர்கள் அருகில் உள்ள வேறொரு கல்லறைத் தோட்டத்தை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்` என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |