"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தன்மானத்தை இழந்து பணியாற்ற வேண்டுமா?. போலீசார் குமுறல்




திண்டுக்கல், மார்ச்.21-

"தன்மானத்தை இழந்து அடிமைகளாக பணியாற்ற வேண்டுமா போலீசாரே சிந்தீப்பீர்' என்ற தலைப்பில் திண்டுக்கல் போலீசாரிடம் சங்கம் துவக்க பிட் நோட்டீசுகளை சிலர் வினியோகித்து வருகின்றனர்.

சென்னை ஐகோர்ட்டில் போலீஸ், வக்கீல் மோதல் சம்பவத்தை விசாரித்த ஐகோர்ட் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் விசுவநாதன், வடசென்னை இணை கமிஷனர் ராமசுப்ரமணியம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவும், சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த சம்பவத்தையடுத்து திண்டுக்கல் போலீசாரிடம் சிலர், "தன்மானத்தை இழந்து அடிமைகளாக பணியாற்ற வேண்டுமா, போலீசாரே சிந்திப்பீர்' என்ற தலைப்பில் பிட்நோட்டீகளை வினியோகித்துள்ளனர். இதில் வக்கீல்களை கடுமையாக தாக்கியும், போலீசார் தங்கள் உரிமைகளை பெற உடனடியாக சங்கம் துவக்கம் வேண்டும் என்றும் எழுதப் பட்டுள்ளது.

இந்த நோட்டீசுகளை கைப்பற்றிய தனிப்பிரிவு போலீசார், அவை யாரால் வினியோகிக் கப்படுகிறது என விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்; இந்த பிட்நோட்டீசுகள் இங்கு அச்சிடப்படவில்லை. சென்னையில் இருந்து வந்துள்ளது. இதை தனிப்பிரிவு போலீசாரிடம் அளித்துள்ளோம். அவர்கள் விசாரித்து வருகின்றனர் என்றார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections