நடிகை அசின் உதவியாளர் என்னவானார்?.நடிகை அசினிடம் விசாரணை நடத்த முடிவு!.போலீசார், மும்பை விரைவு ![]() ![]() சென்னை, மார்ச்.19- உதவியாளர் மாயமான விவகாரம் தொடர்பாக நடிகை அசின் மற்றும் அவருடைய தந்தையிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பைக்கு தனிப்படை போலீசார் செல்கின்றனர். சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் காந்திநகர் கருமாரியம்மன் தெருவை சேர்ந்த சுடலை வடிவு என்ற பெண், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் சுடலை வடிவு கூறியிருப்பதாவது:- நடிகை அசினின் உதவியாளராக இருந்து, ஒரு மாதத்திற்கு முன் மும்பையில் மாயமான தனது மகன் நல்லமுத்துக்குமாரசாமியை கண்டு பிடித்து கொடுக்க வேண்டுமென அவரது தாய் போலீசில் புகார் செய்து கதறி அழுதார். தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவர் அதே மாவட்டத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுடலைவடிவு. இவர்களது மகள் நங்கேஸ்வரி, மகன் நல்லமுத்துக்குமாரசாமி. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் முத்துக்கருப்பன் மாரடைப்பால் இறந்தார். நாசரேத் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்த நல்லமுத்துக்குமாரசாமி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து நடிகர் விஜயிடம் உதவியாளராக சேர்ந்தார். "போக்கிரி' படப் பிடிப்பின் போது, நல்லமுத்துவின் சுறுசுறுப்பை பார்த்து கூடுதல் சம்பளம் மற்றும் "பேட்டா' கொடுப்பதாக கூறி, அவரை அசின் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். கடந்த 4 ஆண்டுகளாக அசினிடம், வேலை பார்த்து வந்தார். மும்பையில் தங்கியிருந்த நல்லமுத்து சென்ற ஆண்டு ஜூலை மாதம், டூவீலரில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். உடனடியாக அங்கு சென்ற சுடலைவடிவு, மகனுக்கு உதவியாக இரண்டு மாதம் அங்கேயே தங்கினார். அதன்பின் மகனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். மேலும் இரண்டு மாத ஓய்வில் ஊன்று கோல் உதவியுடன், மெல்ல நடக்க பழகினார் நல்லமுத்து. இந்நிலையில் மீண்டும் வேலைக்கு வருமாறு நல்லமுத்துவை, அசின் தொடர்ந்து அழைத்தார். அவரும் மும்பைக்கு சென்றார். மோதிலால் நகரில் தனி அறை எடுத்து தங்கினார். விபத்திற்கு முன் இருந்தது போல் வேகமாக, செயல்பட முடியாமல் பணிகளை மெல்லமாக செய்து வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், அசின் தன்னை தரக்குறைவாக பேசி மிகவும் "டார்ச்சர்' செய்வதாக போன் மூலம் தாயிடம் வருத்தப்பட்டிருக்கிறார். பின்னர், மகனுடன் சுடலைவடிவால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. நடிகை அசினை தொடர்பு கொண்டபோதும் பேச முடியவில்லை. சுடலைவடிவிடம் பேசிய அசினின் தந்தை ஜோசப், உனது மகன் வேலையை விட்டு நின்று விட்டான். வேலை பார்த்த வரை சம்பளமும் பெற்றுக் கொண் டான் என்று கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த சுடலைவடிவு மும்பைக்கு சென்று மகனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் சென்ற ஜோசப், உனது மகன் மும்பை தாதாக்களின் கூட்டத்தில் சேர்ந்து விட்டான். அவனை தேடுவதில் பலனில்லை. பேசாமல் ஊர் போய்ச் சேருங்கள் என்று மிரட்டாத குறையாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனாலும், மகன் காணாமல் போனது குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்ய முயற்சித்திருக்கிறார். இதையறிந்த ஜோசப், அவரை புகார் செய்ய விடாமல் தடுத்து, நீங்கள் சென்னைக்கு செல்லுங் கள்; உங்கள் மகனை விரைவில் கண்டு பிடித்து அனுப்பி வைக்கிறோம் என்று உறுதி அளித்திருக்கிறார். நிம்மதி அடையாத சுடலைவடிவு, மகன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு 500 ரூபாய் மற்றும் தனது மகன் அணிந்திருந்த தங்கச் செயின் அறுந்த நிலையில் படுக்கையில் கிடந்தது. இதனால், தனது மகனுக்கு ஏதோ நேர்ந்துள்ளதாக பதறிய சுடலை வடிவு, சென்னை போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி, செங் குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்மணியன் நேற்று, சுடலை வடிவிடம் விசாரணை நடத்தினார். ஆனாலும் அவரது வீடு சோழவரம் போலீஸ் எல்லைக் குள் இருப்பதால், அங்கு புகார் அளிக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டது.மேலும் நடிகை அசின் மற்றும் அவரது தந்தை ஜோசப் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக மும்பைக்கு தனிப்படை போலீசார் செல்ல உள்ளனர். இதற்கிடையே, புகார் குறித்து நடிகை அசின் தந்தை ஜோசப் கூறுகையில், "முத்துக்குமார் வேலைக்கு சேர்ந்தது பற்றி மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 21-ந் தேதியில் இருந்தே அவர் வேலையை விட்டு சென்றுவிட்டார். அவரது நண்பர் கேசவனின் போன் நம்பரை போலீசாரிடம் கொடுத்துள்ளேன்'' என்றார். உதவியாளர் மாயமானது உட்பட நடிகை அசின் மீது இரண்டாவது புகார் போலீசில் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது வீட்டில் வேலை செய்த பெண் கொடுமை செய்யப்படுவதாகவும், அவரை மீட்டுத்தரவேண்டும் என்றும் அப்பெண்ணின் அம்மா தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அப்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டார். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன் மும்பையில் மாயமான தனது மகனை மீட்டுத் தர வேண்டுமென்று, சுடலைவடிவு போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து செங்குன்றம் மற்றும் சோழவரம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |