பா.ஜனதாவில் சேர மாட்டேன்!.நடிகை நக்மா மறுப்பு!. ![]() புதுடெல்லி, மார்ச்.19- மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு நடிகை நக்மா விரும்புகிறார். அது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்தார். வட மாநில மக்கள் அதிகமாக வசிக்கும் அந்த தொகுதியில் போட்டியிட மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பா.ஜனதா கட்சியில் நடிகை நக்மா சேரப்போகிறார் என்றும், மும்பை வடக்கு மத்திய தொகுதியில் நடிகர் சஞ்சய்தத்தின் சகோதரியான காங்கிரசை சேர்ந்த பிரியாவை எதிர்த்து நக்மா போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. அதை நக்மா மறுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறுகையில், "அந்த தகவல்களில் உண்மை எதுவும் கிடையாது. பரம்பரையாகவே நான் ஒரு காங்கிரஸ் தொண்டர். கட்சியின் தலைவர் சோனியா மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். மும்பை வடமேற்கு தொகுதியில் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக நான் ஜெயித்து காட்டுவேன்'' என்றார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |