சென்னையில் நாளை நடக்கும் வக்கீல்கள் ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி!.அசம்பாவிதங்களை தடுக்க 100 வீடியோ கேமராக்கள் மூலம் படம் பிடிக்க ஏற்பாடு ![]() சென்னை, மார்ச்.18- சென்னையில் நாளை(19-ந் தேதி) நடைபெறும் வக்கீல்கள் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்க உள்ளனர். ஊர்வல காட்சிகளை 100 வீடியோ கேமராக்கள் மூலம் படம் எடுக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் வக்கீல்கள் போலீசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஐகோர்ட்டில் நடந்த மோதல் சம்பவத்தில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சகட்டமாக நாளை(19-ந்தேதி) சென்னையில் வக்கீல்கள் மாபெரும் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து இந்த பேரணியில் வக்கீல்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பேரணி நாளை காலை 10 மணிக்கு சென்னை மன்றோசிலை அருகில் இருந்து புறப்பட்டு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே முடிவடையும் என்று வக்கீல்கள் அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி கேட்டு வக்கீல்கள் சங்கம் சார்பாக விண்ணப்பித்துள்ளனர். பேரணிக்கு சட்டத்திற்குட்பட்டு வழக்கமான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.பேரணியையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பேரணி காட்சிகளை ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை 100 வீடியோ கேமராக்கள் மூலம் படம் எடுக்கவும் போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.பேரணி செல்லும் பாதÛயில் நவீன கேமராக்கள் மூலம் மாடி கட்டிடங்களிலிருந்தும் படம் பிடிக்க உள்ளனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |