"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

நடிகர் ஜெயம்ரவி திருமணம் சென்னையில், ஜுன் 4-ந் தேதி நடக்கிறது






சென்னை, மார்ச்.18-

நடிகர் ஜெயம்ரவிக்கும், படஅதிபர் சுஜாதா விஜயகுமாரியின் மகள் ஆர்த்திக்கும் சென்னையில் வருகிற ஜுன் மாதம் 4-ந் தேதி திருமணம் நடக்கிறது.

`ஜெயம்', `எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி', `மழை', `உனக்கும் எனக்கும்', `தீபாவளி', `சந்தோஷ் சுப்பிரமணியம்', `தாம் தூம்' ஆகிய படங்களில் நடித்தவர் ஜெயம் ரவி. இவர், பிரபல படஅதிபர் எடிட்டர் மோகனின் மகன் ஆவார்.

ஜெயம் ரவிக்கும், படஅதிபர் விஜயகுமார்-சுஜாதா விஜயகுமார் தம்பதியின் மகள் ஆர்த்திக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். இந்த திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.

இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்களது திருமணம் வருகிற ஜுன் மாதம் 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜுன் 7-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை எடிட்டர் மோகன், அவருடைய மூத்த மகன் டைரக்டர் ராஜா ஆகியோர் செய்து வருகிறார்கள்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections