மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஒரு லட்சம் பேருக்கு விருந்து ![]() மதுரை, மார்ச்.18- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.,8ல் நடக்கிறது. அன்று ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.மார்ச் 26ல் விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் துவங்குகின்றன. ஏப்.,2ல் யாகசாலை பூஜை துவங்குகிறது. அம்மன் மற்றும் சுவாமி சன்னதி கோபுரத்திற்கென தலா 33 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஏப்.,6ல் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக 40 யாக குண்டங்கள் தயாராகின்றன. இதுதவிர பஞ்ச குண்டங்கள் உட்பட மொத்தம் 150 யாக குண்டங்களில் வேள்வி நடத்தப்படுகிறது. கோயில் பட்டர்கள் உட்பட 200 வெளியூர் பட்டர்கள் வேள்வி பூஜையில் ஈடுபடுகின்றனர். வைகை நீர் மற்றும் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நீரைக் கொண்டு காலை 9.15 மணிக்கு ராஜகோபுரங்கள் கலசங்களுக்கும், 9.30 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 9.45 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அன்று ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளிக்க திருவருள் முருகன் பக்தசபை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்திடம் இதற்கான அனுமதியை சபை நிர்வாகிகள் கேட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.,8ல் நடக்கிறது. இதை முன்னிட்டு பல நூற்றாண்டுகளாக மூடப்படாமல் இருந்த அம்மன் சன்னதி தங்க கோபுரத்தில் 1200 சதுர அடிக்கு புதிதாக ரூ.33 லட்சம் செலவில் தங்கத்தகடு பதிக்க முடிவு செய்யப்பட்டது. இக்கோபுரம் 1559ல் சிராமலை செவ்வந்திமூர்த்தி செட்டி என்பவரால் கட்ட பட்டது. மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் ஸ்தபதி தலைமையிலான குழுவினர் இதற் கான பணியில் மூன்று மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 30 கிலோ தங்கத்தை உருக்கி பிஸ் கட்டாக மாற்றினர். அதை வெட்டி மெல்லிய தகடாக்கி, வேலைப்பாடுள்ள தாமிர தகட்டில் பதித்து வருகின்றனர்.நேற்று மதியம் கோபுரத்தில் தங்கத்தகடு பதிக்கும் பணி துவங்கியது. இம்மாத இறுதிக்குள் முழுமையாக பதிக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள தங்க த்தகட்டை புதுப் பிக்கும் பணியும் நடக்க உள்ளது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |