பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தேதி தொடங்குகிறது ![]() சென்னை, மார்ச்.17- பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். 23-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இந்த நிலையில், தேர்வு முடிந்த மறுநாள், அதாவது 24-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. முதலில் தமிழ் முதல் தாள் விடைத்தாள்கள் திருத்தப்படும். தமிழகம் முழுவதும் 55 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. சென்னையில் 3 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் பணியை நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், விடைத்தாள்கள் பராமரிக்கப்பட்டு வரும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |