"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த விபத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட மூன்று பேர் படுகாயம்




வேலூர், மார்ச்.16-

வேலூர் அருகே, கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த விபத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கை தமிழச்சி தங்கபாண்டியன். தி.மு.க., பேச்சாளர். கட்சியின் மகளிர் அணியில் பொறுப்பு வகித்து வருகிறார். லோக்சபாத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கட்சிப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழச்சி, நேற்று காலை கார் மூலம் கிருஷ்ணகிரி வழியாக வேலூர் சென்றார். காரில் அவரும், அவருடைய மெய்க்காப்பாளர் கோபால் ரத்தினமும் இருந்தனர். வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளி அருகே வரும்போது, திடீரென்று கார் தாறுமாறாக ஓடி மூன்று முறை பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது. தமிழச்சி தங்கபாண்டியன், அவரது மெய்க்காப்பாளர் கோபால் ரத்தினம் மற்றும் கார் டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

மூவரும், வேலூர் சி.எம்.சி., தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த வேலூர் கலெக்டர் ராஜேந்திரன், மாவட்டச் செயலர் காந்தி உள்ளிட்டோர், மருத்துவமனை சென்று அவரைப் பார்த்தனர். தமிழச்சி தங்கபாண்டியன், வரும் லோக்சபாத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தி.மு.க., தலைமையிடம் மனு கொடுத்துள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில், அந்த கார் டிரைவர் ஓய்வு இல்லாமல் பணியாற்றியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections