ஆபாச படம் எடுத்த டியூஷன் ஆசிரியர் கைது ![]() கூடலூர், மார்ச்.16- மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து சில்மிஷம் செய்த டியூசன் ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பீர்மேட்டில், "வைல்டு லைப் ஸ்டடி சென்டர்' என்ற பெயரில் டியூசன் சென்டர் வைத்திருப்பவர் விஜயகுமார்(42). இதே இடத்தில் யோகா பயிற்சியும் அளித்து வருகிறார். இங்கு, 16 மாணவிகள் யோகா மற்றும் டியூஷன் படிக்கின்றனர். இவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபடும் போது, விஜயகுமார் தனது மொபைல் போனில் ஆபாசமாக படம் எடுத்து அதை கம்ப்யூட்டரில் போட்டு பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் ஆபாச படங்களை, சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் காட்டி, "இந்த விஷயத்தை வெளியில் கூறினால் உங்களுக்கு ஆபத்து' என மிரட்டி சில்மிஷத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பயந்த மாணவிகள், வெளியில் சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில், கம்ப்யூட்டர் பழுது ஏற்பட்டதால் அதை பீர்மேட்டில் உள்ள ஒரு கடையில் சரி செய்ய கொடுத்துள்ளார். சரி செய்தவர், கம்ப்யூட்டரில் மாணவிகளின் ஆபாச படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பீர்மேடு போலீசில் புகார் செய்தார். டியூசன் ஆசிரியர் விஜயகுமாரை கட்டப்பனை டி.எஸ்.பி., தாமஸ் கைது செய்து, அவரிடமிருந்த கம்ப்யூட்டர், 40 ஆபாச "சிடி'க்கள், போட்டோக்களை பறிமுதல் செய்தார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |