"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

நயாகரா நீர்வீழ்ச்சியில் 180 அடி பள்ளத்தில் விழுந்தவர் உயிர் பிழைத்தார்




அமெரிக்கா, மார்ச்.13-

அமெரிக்காவில், கனடா எல்லை அருகே உள்ளது நயாகரா நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியில் உள்ள 3 அருவிகளில் ஒன்று ஹார்ஸ்ஷூ அருவி ஆகும். இந்த அருவியில் 30 வயது உள்ள இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்காக குதித்தார். ஆனால் அடி எதுவும் படாமல் அவர் தப்பித்தார். 180 அடி கொண்ட அந்த நீர்வீழ்ச்சியில் விழுந்தவர்கள் யாரும் உயிர் பிழைத்தது கிடையாது. கடந்த 100 ஆண்டுகளில் அப்படி விழுந்தபிறகு உயிர் பிழைத்த 2-வது நபர் இவர் தான் என்று கூறப்படுகிறது.

அவர் தண்ணீரில் விழுந்ததும், அவரை காப்பாற்ற மீட்புக்குழுவினர் முயன்றனர். இந்த முயற்சிக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டார். தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அவரை காப்பாற்றுவதற்காக தாழ்வாக பறந்தபடி, தண்ணீருக்குள் கயிறை தூக்கி போட்டது. அதை பிடித்துக்கொண்டு அவர் ஹெலிகாப்டருக்குள் ஏறி வரவும் மறுத்து விட்டார்.

மீட்புக்குழுவினரை விட்டு விலகி தண்ணீரில் நீந்தி ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று விட்டார். கிட்டத்தட்ட 45 நிமிட போராட்டத்துக்கு பிறகு மீட்புக்குழுவினர் அவரை பிடித்தனர். அவர்கள் அவரை மேலே தூக்கி வந்தனர். அவர் தலையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections