திரிசூலம் ஊராட்சி தலைவர் கொலை குவாரி அதிபர்களுக்கு தொடர்பு பிரபல ரவுடிக்கு வலை ![]() சென்னை, மார்ச் 13- திரிசூலம் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரனை (45), நேற்றுமுன்தினம் இரவு ராணி அண்ணா நகர் குவாரி ரோட்டில், ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. தகவல் அறிந்து பல்லாவரம் போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தலக்கனாஞ்சேரி கிராமத்தில் உள்ள 5ம் எண் கல்குவாரியை ராமச்சந்திரன் நடத்தி வந்தார். இவருக்கும் மற்ற 1, 2, 3 மற்றும் 4ம் எண் கல் குவாரி அதிபர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கபிலன் (எ) சலிப்பு ராமச்சந்திரன் என்பவர், சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரனை சந்தித்து, மாமூல் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் மற்ற குவாரி அதிபர்களுக்கு தெரிந்ததும், ரவுடி கபிலனின் ஆட்களை ஏவி ஊராட்சித் தலைவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடத்த போது ராமச்சந்திரனுடன், நண்பர் முத்துக்குட்டி உடனிருந்துள்ளார். கும்பலைப் பார்த்ததும் அவர் தப்பி ஓடியதால், இந்த கொலையில் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என ராமச்சந்திரனின் உறவினர்கள் கூறி வருகின்றனர். தலைமறைவான கபிலனை போலீசார் தேடி வருகின்றனர்.இதற்கிடையே, ராமச்சந்திரனின் உடலுக்கு நேற்று இறுதி சடங்கு நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |