"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் விஜயகாந்த்




சென்னை, மார்ச் 11-

உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் சுமார் 2 லட்சம் தமிழர்கள் போர்முனையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், உடை, இருப்பிடம், மருத்துவ வசதி எதுவும் இல்லை. இலங்கையில் மிகப் பெரிய மனிதப் பேரழிவு காத்திருக்கிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. காலைக் கடன் கழிப்பதற்குக் கூட வழியில்லாமல் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தாய்மார்களின் ஆண் கருக்கள் கலைக்கப்படுகின்றன.

ஏப்ரலில் சிங்களர்களின் புத்தாண்டு வருகிறது. அதற்குள் தமிழர்களை அழித்து புத்தாண்டை வெற்றித் திருநாளாகக் கொண்டாட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசின் முகாம்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஐநா சபை, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் போர் நடக்கும் பகுதிகளில் அனுமதிக்கப்படுவதில்லை.

அங்கு என்ன நடக்கிறது என்பதை இலங்கை ராணுவத்தின் அறிக்கை மூலமே அறிய முடிகிறது. இலங்கை அரசின் இனவெறிப் போக்கால் இனி தமிழர்கள் வாழ தனி நாடு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் மேற்பார்வையில் முகாம்கள் அமைக்க வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கையை இந்தியா வற்புறுத்த வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections