"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

பொள்ளாச்சியில் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் அருண்விஜய் கார் மீது லாரி மோதியது காயமின்றி தப்பினார்






பொள்ளாச்சி, மார்ச்.11-

பொள்ளாச்சியில் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் அருண்விஜய் கார் மீது லாரி மோதியது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். இவர் வெங்கடேஷ் இயக்கும் `மல மல' என்னும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த படப்படிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர்அருண் விஜய் படக்குழுவினருடன் பொள்ளாச்சி பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு ஒட்டலில் தங்கி உள்ளார். நேற்று காலை 61/2 மணிக்கு நடிகர் அருண்விஜய் ஓட்டலில் இருந்து காரில் பாலக்காடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சற்று தூரம் சென்ற பின்னர் முக்கியமான ஓரு பொருளை ஓட்டலில் சென்று எடுத்து வருவதற்காக காரை நிறுத்தி திருப்புவதற்காக டிரைவர் பின்னோக்கி ஓட்டினார்.

அப்போது அந்த வழியாக கேரளா சென்ற லாரி எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் மோதியது. இதில் காரின் பின்பகுதி சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் நடிகர் அருண்விஜய் காயமின்றி உயிர் தப்பினார். இதன் காரணமாக நடிகர் அருண் விஜய் படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டு ஓட்டலுக்கு சென்று விட்டார். பின்னர் காலை 10 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் ஏறி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections