"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சர்வதேச குழந்தைகள் பட விழாவுக்கு பாண்டியராஜனின் குறும் படம் தேர்வு








சென்னை, மார்ச்.10-

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பட விழாவில் திரையிடுவதற்காக, பாண்டியராஜனின் `இரு துளிகள்' என்ற குறும்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாண்டியராஜன் நடித்து, டைரக்டு செய்து இருக்கிறார். அவருடன் அஸ்வின்குமார் என்ற சிறுவன் நடித்து இருக்கிறான்.

போலியோ நோய்க்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிற கதையம்சம் கொண்ட படம் இது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections