"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சினிமா படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சுந்தர்சி. சென்ற ரேக்ளா வண்டி கவிழ்ந்தது ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது






சென்னை, மார்ச்.8-

சினிமா படப்பிடிப்பின்போது ரேக்ளா வண்டி கவிழ்ந்து நடிகர் சுந்தர்சி. படுகாயம் அடைந்தார்.

ரஜினிகாந்த் நடித்து பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் `முரட்டுக்காளை'. அந்த படத்தை பிரபல படஅதிபரும், டைரக்டருமான அமிர்தத்தின் மகன் குலாநிதி மீண்டும் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சுந்தர்சி. கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். செல்வபாரதி டைரக்டு செய்கிறார்.

`முரட்டுக்காளை' படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. சுந்தர்சி. மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சம்பந்தப்பட்ட ரேக்ளா பந்தய காட்சி நேற்று படமாக்கப்பட்டது. சுந்தர்சி. ரேக்ளா வண்டியை ஓட்டி செல்வதுபோலவும், அவரை வில்லன் ஆட்கள் முந்தி செல்ல முயற்சிப்பதுபோலவும் காட்சி படமாகி கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக சுந்தர்சி. அமர்ந்திருந்த ரேக்ளா வண்டி மீது ஒரு ஸ்டண்ட் நடிகரின் வண்டி மோதியது. இதனால் சுந்தர்சி. அமர்ந்திருந்த ரேக்ளா வண்டி தலைகுப்புற கவிழ்ந்தது. சுந்தர்சி. மாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். அவருடைய கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி டாக்டர் கூறியதன்பேரில், சுந்தர் சி. ஓட்டலுக்கு போய் ஓய்வு எடுத்தார். அவர் சம்பந்தப்படாத மற்ற காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டன.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections