"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்திற்கு கிடைக்கும் டாடாவின் "நானோ" கார் சென்னையில் அறிமுகம்






சென்னை, ஏப்.3-

டாடாவின் `நானோ' கார் சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்திற்கு கிடைக்கும் இந்த காரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

உலகிலேயே மிகவும் குறைந்த விலை காரை தயாரிக்க இருப்பதாக, டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா கூறியிருந்தார். அதன்படி, சிறிய ரக `நானோ' காரை ரூ.1 லட்சம் விலையில் தயாரித்தனர். இந்த கார் கடந்த மாதம் 23-ந் தேதி மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் நேற்று `நானோ' கார் அறிமுகம் செய்யப்பட்டது. கிண்டியில் உள்ள கான்கார்ட் மோட்டார்ஸ் மற்றும் அண்ணாநகரில் உள்ள வி.எஸ்.டி. மோட்டார்சில் பொதுமக்கள் பார்வைக்காக `நானோ' கார் வைக்கப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வந்து பார்த்த பொதுமக்கள், ரூ.300 கட்டணம் செலுத்தி முன்பதிவு கூப்பனையும் வாங்கிச் சென்றனர்.

`நானோ' காரின் என்ஜின், பின்பகுதியில் அமைந்துள்ளது. 4 பேர் வசதியாக உட்கார்ந்து செல்லலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கிலோ மீட்டர் வரை கிடைக்கிறது. `டிïப்' இல்லாத டயர் பொறுத்தப்பட்டுள்ளதால், பஞ்சராவது தடுக்கப்படுகிறது.

இந்த கார் 3 மாடல்களில் கிடைக்கிறது. `நானோ' ஸ்டேண்டர்டு ரூ.1,42,600 விலையிலும், `நானோ' சி.எக்ஸ். ரூ.1,69,619 விலையிலும், `நானோ' எல்.எக்ஸ். ரூ.1,94,667 விலையிலும் சென்னையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

சென்னையில் `நானோ' கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளே, சுமார் 250-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுத்தீர்ந்தன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து காரை பார்த்து சென்றனர். ஏப்ரல் 9-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

தவணை முறையில் `நானோ' கார் வாங்குபவர்களுக்கு, பாரத ஸ்டேட் வங்கி கடன் கொடுக்க முன்வந்துள்ளது. ரூ.6,250 மாதச்சம்பளம் பெறுபவர்கள் வங்கிக்கடன் பெற தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த கடன் வசதியை சொந்த தொழில் செய்பவர்கள் பெற விரும்பினால், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.

`நானோ' கார் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றாலும், தொலைதூர பயணத்திற்கு பயன்படுத்த முடியாது. நாம் எப்படி, அருகில் உள்ள இடத்திற்கு செல்ல மொபட்டை பயன்படுத்துகின்றோமோ, அதுபோலத்தான் `நானோ' காரையும் பயன்படுத்த முடியும்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections