|
‘இன்னொருவன்'
![]() இன்னொருவன் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது.
பாடல்களை தயாரிப்பாளர் முரளிதரன், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைபுலி
சேகரன் வெளியிட, டாக்டர் புஷ்பாஞ்சலி அசோகன்
பெற்றுக்கொண்டார்.
அட்சயா மல்டி மீடியா
கிரியேஷன்ஸ் என்னும் புதுப்பட நிறுவனம் சார்பில் குடந்தை
எஸ்.பி.சந்திரசேகர் தயாரிக்கும் படம் 'இன்னொருவன்'.... இதில் கதாநாயகனாக ஆதித்யா, கதாநாயகியாக மனோஹா ஆகிய புதுமுகங்கள்
அறிமுகமாகின்றனர். இவர்களுடன் விசு, மணிவண்ணன்,
எம்.எஸ்.பாஸ்கர்,தண்டபாணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மனிதனுக்கு தன்னம்பிக்கை அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்துவதுதான்
படத்தின் கதை. படத்தின் கதையையும் காசையும் வைத்துக்கொண்டு கதாநாயகனுக்கான தேடுதல்
வேட்டையில் இறங்கியபோது ஒருவரும் கிடைகாமல் தவிக்க அப்போது வாய்ப்பு தேடி தனது அலுவலகத்திற்கு வந்த ஆதித்யா
கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அடுத்த நாளே படப்பிற்கு
கிளம்பிவிட்டார்களாம். ஆதிஷ் உத்ரியன் இசையில் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள்.
இதில் ஐந்து பாடல்களை தயாரிப்பாளர் எஸ்.பி.
சந்திரசேகரே எழுதி பாடியுள்ளார். இதுவரை காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த
எம்.எஸ்.பாஸ்கர், முதல்முதலாக ஒரு கானா பாடலை பாடி பின்னணி பாடகராகவும்
அறிமுகமாகிறாரார். தினாவின் நடன அமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு
ரிஷா குத்தாட்டம் போட்டுள்ளாரார். |