![]() "Kanavu Thozhil Salai" as your Homepage ![]() டாப் 10 படங்கள் (25/07/2010 - நிலவரப்படி) 01. சிங்கம் 02. தில்லாலங்கடி 03. மதராசபட்டினம் 04. களவாணி 05. வெளுத்துகட்டு 06. குற்றப்பிரிவு 07. மிளகா 08. ராவணா 09. அம்பாசமுத்திரம் அம்பானி 10. மாஞ்சா வேலு ![]() எந்திரன் படப்பிடிப்பு நிறைவு ![]() ![]() ![]() ![]() இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டம் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள மிகப்பிரமாண்டமான படம் ‘எந்திரன்‘. பெரும் பொருட்செலவில் இதுவரை இந்தியப்பட உலகில் யாரும் உருவாக்காத அளவுக்கு, படவுலகமே வியப்பின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு, மிகப்பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு, 2 ஆண்டுகளாக இடைவிடாமல் நடந்து, கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. ‘எந்திரன்’ படம் எப்போது வெளிவரும் என்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நிலையில், இப்போது அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. இரவு, பகல் பாராமல் உழைத்த அத்தனை பேரும், பிரமாண்ட படப்பிடிப்பு முடிந்த அன்று இரவு பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினர். இதில், ரஜினிகாந்த், ஷங்கர், ஐஸ்வர்யா ராய் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நட்சத்திரங்கள், இயக்குனர், மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் அதிபரும் சன் நெட்வொர்க் தலைவருமான கலாநிதி மாறன் சிறப்பு விருந்து அளித்தார்.
சிறப்பு விருந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் கலந்துகொண்டனர். படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக, கலாநிதி மாறனிடம் அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ‘எந்திரன் திரைப்படம் இந்திய திரையுலக வரலாற்றில் மாபெரும் வெற்றிப்படமாக அமையும்‘ என்று அப்போது மிகுந்த பெருமிதத்துடன் ரஜினிகாந்த் கூறினார். ‘நவீன தொழில்நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் ‘எந்திரன்’ ஹாலிவுட்டுக்கே புதுமையான படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் அதிசயிக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது’ என்று இயக்குனர் ஷங்கர் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். ‘எந்திரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் 31-ம் தேதி நடக்கிறது. கேட்பவர்களை மயக்கும் விதத்தில் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார் ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். பிரமாண்டமாக நடக்க இருக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த கலைக்குழுக்கள் இதில் பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன. ஸ்ரேயா நடித்த படத்துக்கு சிக்கல் ![]() ![]() ![]() தீபா மேத்தா தயாரிப்பில் அவரது சகோதரர் அசோக் மேத்தா இயக்கியுள்ள ஆங்கில படம் குக்கிங் வித் ஸ்டெல்லா. இதில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் படம் வெளியாகவில்லை. படம் முடிந்து முதல் ஆறு மாதங்கள், பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். அதன் பின் இந்தியாவில் திரையிடுவது படக்குழுவின் திட்டம். அதே போல படத்தை திரையிட முயற்சியும் மேற்கொண்டனர். ஆனால் வழக்கமாக தீபா மேத்தாவின் படங்களை வாங்கும் வினியோகஸ்தர்கள்கூட படத்தை வாங்க முன்வரவில்லையாம். காரணம், தீபாவின் முந்தைய படங்களான ஃபயர், எர்த், வாட்டரில் இருந்தது போல் இதில் எந்த சர்ச்சையான விஷயங்களும் இல்லை. கவர்ச்சி பாடலோ, காட்சியோ கூட இல்லை. தீபா மேத்தா இதில் வெறும் தயாரிப்பாளர்தான். இந்த காரணங்களால் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம். படத்தில் ரசிகர்களை கவரும் ஏதாவது அம்சம் தேவை என்கிறார்களாம். ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கிறாராம் தீபா மேத்தா. ![]() கீர்த்தி சாவ்லா கொடுத்த முத்தம் ![]() ![]() ![]() விஷன்ப்ரோஈ வெண்ட் மேனேஜ்மெண்ட் ஏற்பாடு செய்திருந்த ‘விவெல் மிஸ் சின்னத்திரை&2010’ போட்டியில் சின்னத்திரை நடிகைகள் தேவி பிரியா, லாவண்யா, விலாசினி, மோனிகா, மோபின், ஸ்வேதா, காயத்ரி, மணிமேகலை ரஜினி, ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள், போட்டி நடுவர்களாக ‘பாண்டவர் பூமி’ ஷமித்தா, ‘மிளகா’ நட்ராஜ், இயக்குனர் ரவிமரியா, அழகுக்கலை நிபுணர் மது, மாடல் பயிற்சியாளர் சுனிரல் மேனன், மிஸ் சென்னை திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விவெல் மிஸ் சின்னத்திரை2010 பட்டத்தை ஸ்வேதா வென்றார். இரண்டாவது இடத்தை ரஜினியும், மூன்றாவது இடத்தை தேவிபிரியாவும் பிடித்தனர். பட்டம் வென்றவர்களுக்கு கீர்த்தி சாவ்லா கீரிடம் சூட்டி முத்தம் கொடுத்தார். ![]() நடிப்பிற்கு முழுக்கு போட சோனா திட்டம் ![]() ![]() ![]() நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு, தனது தயாரிப்பு பணியில் முழுமையாக இறங்க நடிகை சோனா திட்டமிட்டுள்ளார். தமிழில் விஜய் நடித்து வெளியான ஷாஜகான் படத்தில் சோனா டப்பிங் பேசி உள்ளார். சோனாவின் முதல் தயாரிப்பான 2010 பாக்யராஜ் என்னும் படம் விரைவில் வெளியாக உள்ளது. இவரது 2வது படமான கனிமொழியும் நிறைவடையும் நிலையில் இருப்பதால், தனது 3வது பட தயாரிப்பில் முழு கவனம் செலுத்த சோனா திட்டமிட்டுள்ளார். இனி தான் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும், சிறந்த கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே நடிக்கப் போவதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார். சோனா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ![]() சிம்புவுடன் ஜோடி சேர அனுஷ்கா மறுப்பு ![]() ![]() தெலுங்கில் வெளியாகியுள்ள படம் ‘வேதம்’. இதில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார் அனுஷ்கா. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. தமிழில் சிம்பு ஹீரோவாக நடிப்பார் என தெரிகிறது. தெலுங்கில் நடித்த அதே வேடத்தை ஏற்குமாறு அனுஷ்காவிடம் பேசப்பட்டதாம். ஆனால் இதில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டார். சிம்புவுக்கு ஜோடி என்பதால் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சிம்பு - அனுஷ்கா காதல் என கிசு கிசு பரவியது. சிம்புவுடன் ஜோடி சேரும் நடிகைகள் அவருடன் இணைத்து பேசப்படுவதும் வழக்கம். இந்த காரணங் களால் இதில் அனுஷ்கா நடிக்க மறுத்திருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.
©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, 044-64541144 +91-7299140319 +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |