* டாப் 10 படங்கள் (18/07/2010 - நிலவரப்படி) * 50-வது படம் மங்காத்தா அஜீத் ஜோடியானது அதிர்ஷ்டம்: நீதுசந்திரா * மோனிகாவின் கனவுப் படம் * 200 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை "தேவலீலை'' * தமிழ் படிக்கும் ஹன்சிகா * இலங்கை படப்பிடிப்பில் ரகசிய சந்திப்பு சல்மான்கானுடன் அசின் நெருக்கம்

Download latha tamil font


"Kanavu Thozhil Salai" as your Homepage



டாப் 10 படங்கள் (18/07/2010 - நிலவரப்படி)


01. சிங்கம்

02. மதராசபட்டினம்

03. களவாணி

04. குற்றப்பிரிவு

05. வெளுத்துகட்டு

06. மிளகா

07. ராவணா

08. அம்பாசமுத்திரம் அம்பானி

09. மாஞ்சா வேலு

10. திட்டக்குடி



  • 50-வது படம் மங்காத்தா அஜீத் ஜோடியானது அதிர்ஷ்டம்: நீதுசந்திரா












    அஜீத்தின் 50-வது படத்துக்கு மங்காத்தா என பெயர் வைத்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தது. தற்போது நீது சந்திராவுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இவர் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் பேய்ப்படத்தில் அறிமுகமானவர். விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் நடித்துள்ளார்.

    அஜீத் ஜோடியானது குறித்து நீது சந்திரா கூறியதாவது:-

    வெங்கட் பிரபு அலுவலகத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன் என் மானேஜரிடம் பேசினர். அஜித் ஜோடியாக என்னை நடிக்க வைக்க முடிவு செய் திருப்பதாக கூறினர். நான் ரொம்ப மகிழ்ச்சியானேன்.

    உடனடியாக வெங்கட் பிரபுவை தொடர்பு கொண் டேன். அவர் மங்காத்தா படத்தில் என்னை நாயகி யாக்கி இருப்பது பற்றி சொன்னார். ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

    வெங்கட் பிரபு இயக்கும் ஸ்டைல் பற்றி நான் கேள்விப் பட்டுள்ளேன். அவர் டைரக்டு செய்த எல்லா படங்களுமே சிறப்பாக பேசப்பட்டது. தமிழ் திரையுலகில் அவர் திறமையான படைப்பாளி. அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு எந்த நடிகையாவது மறுப்பாரா?

    அஜீத்துக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியும். எங்கள் ஜோடி பொருத்தம் கச்சித மாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    தெலுங்கு நடிகர் நாகார் ஜுனாவும் மங்காத்தா படத்தில் நடிப்பதாக அறிந்தேன். அவர் சிறந்த நடிகர் . நாகார்ஜுனாவுடன் நடிக்க இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது அஜீத், நாகார்ஜுனா இருவருடன் சேர்ந்து நடிப்பது ரொம்ப சந்தோஷத்தை அளித்துள்ளது.

    இவ்வாறு நீது சந்திரா கூறினார்.



  • மோனிகாவின் கனவுப் படம்










    அழகி, சிலந்தி புகழ் மோனிகா தற்போது `கவுரவர்கள்" படத்தில் நடத்திவருகிறார். ஏற்கனவே `வர்ணம், நஞ்சுபுரம், அகராதி" ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

    இந்நிலையில் கை வசம் "ஆனந்த லீலை, விளையாடலாம்" ஆகிய படங்கள் உள்ளன. எனினும் தற்போது ஒப்புக்கொண்டுள்ள `முத்துக்கு முத்தாக" படத்தில்தான் தனது கனவு கேரக்டர் கிடைதுள்ளது என்கிறார் மோனிகா.

    இது குறித்து அவரிடமே கேட்டபோது... "ராசு மதுரவன் இயக்கவுள்ள படத்தில் நான் நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த கேரக்டர் அமைந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.

    குடும்பப் பாங்கான நடிகைகள் குறைந்துவிட்டனர் என்பவர்கள், இனி நான் நடிக்கும் படங்களை பார்த்து தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்."என்கிறார் மோனிகா.



  • 200 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை "தேவலீலை''







    உலக சக்தி அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று ஒருவன் தவமிருந்து பெறுகிறான். அவனுடைய தகாத செய்கையால் ஒரு சாபம் பெறுகிறான்.

    பவுர்ணமி இரவுக்குள், குறிப்பிட்ட மூன்று பெண்களுடன் அவன் உறவு கொள்ள வேண்டும். அப்போதுதான் இருக்கிற சக்திகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். தவறினால் எல்லாம் பறிபோய்விடும் என்ற நிலை. இதற்காக, அவன் மூன்று பெண்களுடன் சங்கமித்தானா, இல்லையா?

    இப்படி ஒரு மாறுபட்ட கதை கருவை வைத்து உருவாகி வரும் படம், `தேவலீலை.' 200 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை இது. கேபிள் டி.வி, டிஷ், சாட்டிலைட், வாகனங்கள் ஆகியவை படத்தில் தெரியக்கூடாது என்பதால், மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை படப்பிடிப்புக்காக தேர்வு செய்துள்ளனர்.

    சிருங்கேரி, தர்மஸ்தலா, குதிரைமுக்கு, செஞ்சி, சித்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில், மலையும் காடும் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

    கதையின் நாயகனாக தனக்குமார் நடிக்கிறார். நாயகிகளாக ரூபாபட், கவிதா, ஸ்வேதா, புஷ்பா நாயக், சுனிதா ஆகிய ஐந்து அழகிகள் நடிக்கிறார்கள். கதை நாயகன் தீய சக்தியின் குணத்தை கொண்டவன். அவனை நாக கன்னி உருவமெடுத்து ஒரு பாம்பு பழிவாங்க துடிக்கிறது.

    கதையை முடித்து வைப்பது, அந்த பாம்புதான். நாயகன் கூடுவிட்டு கூடு பாய்வது, பாம்பு நாககன்னியாவது போன்ற காட்சிகள், "கிராபிக்ஸ்"சில் உருவாக்கப்படுகின்றன.

    கதை-திரைக்கதையை துளசி எழுத, பாடல்கள்-வசனத்தை அன்பழகன் எழுத, ஒளிப்பதிவு-டைரக்ஷன்: கிருஷ்ணா-பிரபாகர். இசை: துர்கா. 3டி ஸ்டூடியோ காம் எண்டர்டென்மென்ட் கம்பெனி சார்பில் திவாகர், பாலாஜி ரெட்டி ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படம், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.



  • தமிழ் படிக்கும் ஹன்சிகா












    தமிழில் அறிமுகாகி ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையிலேயே கையில் விஜய் படத்திலும், ஜெயம் ரவி படத்திலும் புக் ஆகியிருக்கும் ஹன்சிகா இப்போது தீவிரமாக தமிழ் படித்து வருகிறார்.

    தனுஷ்ன் "மாப்பிள்ளை" படத்தில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வசனத்தை எழுதிவைத்துக்கொண்டு டியூசன் மாஸ்டர் ஒருவரின் உதவியுடன் வசனங்களை பேசிய ஹன்சிகா தற்போது தீவிரமாக தமிழ் படித்து வருகிறார்.

    தமிழ் படித்து, தமிழ்ப் படத்தில் நடித்து, தமிழ் நாட்டிலேயே குடியேற விரும்பகிறாராம் ஹன்சிகா மோத்வானி.



  • இலங்கை படப்பிடிப்பில் ரகசிய சந்திப்பு சல்மான்கானுடன் அசின் நெருக்கம்








    இலங்கை படப்பிடிப்பில் சல்மான்கான்-அசின் இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அங்கு ரகசியமாக சந்தித்து பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    “கஜினி” மூலம் இந்திக்கு போன அசின் அப்படம் ஹிட்டானதால் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்தி ஹீரோக்கள் மத்தியில் அசினுடன் ஜோடி சேர போட்டா போட்டி நிலவியது.

    இரண்டாவது படமாக “லண்டன் டிரீம்ஸை“ தேர்ந்தெடுத்தார். அப்படத்தில் சல்மான்கான் கதாநாயகன் என்பதால் ஆர்வமாக நடித்தார். அந்த படம் தோல்வியானதால் அசின் மார்க்கெட் சரிந்தது.

    தமிழில் ஹிட்டான “காக்க காக்க” படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவாகியுள்ளது. சூர்யா கேரக்டரில் ஜான்அபிரகாமையும், நாயகியாக அசினையும் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். “லண்டன் டிரீம்ஸ்” தோற்றதால் அசினை, அப்படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இது போல் “சைலன்ஸ்” என்ற படத்திலும் அவரை ஒப்பந்தம் செய்து கடைசியில் நீக்கி விட்டனர். அசினுக்கு பதில் பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    இதனால் மன வருத்தத்தில் இருந்தார் அசின். அவரை சல்மான்கான் தனது “ரெடி” படத்தில் துணிச்சலாக ஒப்பந்தம் செய்துள்ளார். எனவே சல்மான்கான் மீது அசினுக்கு அன்பு ஏற்பட்டது. அதுவே இருவரின் நெருக்கத்துக்கு காரணம் என்கின்றனர். “லண்டன் டிரீம்ஸ்” படப்பிடிப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வந்தன.

    அசினுக்கு சல்மான்கான் ஆடம்பரகார் மற்றும் வீடு வாங்கி காதல் பரிசாக கொடுத்ததாக செய்திகள் வந்தது. இருவரும் அதை மறுத்தார்கள்.



  • Bookmark and Share

    ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan,
    044-64541144
    +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578
    No part of this website may be reproduced or used in any form without permission

    DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

    send your comments and corrections