![]() "Kanavu Thozhil Salai" as your Homepage ![]() டாப் 10 படங்கள் 01. அசல் 02. ஆயிரத்தில் ஒருவன் 03. தீராத விள்ளையாட்டு பிள்ளை 04. குட்டி 05. தமிழ்படம் 06. கோவா 07. ஜக்குபாய் 08. வேட்டைக்காரன் 09. தைரியம் 10. கதை ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட் ![]() ![]() ![]() நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் அடிபட்டு திடீரென்று நடிகை ரஞ்சிதா காணாமல் போனதில், ஏக அப்செட்டில் இருக்கிறார் மணிரத்னம். காரணம் விரைவில் வெளியாக உள்ள அவரது ராவணன் படத்தில் ரஞ்சிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் சில காட்சிகள் பாக்கியிருக்கும் நிலையில் ரஞ்சிதா தலைமறைவாகிவிட்டதால், ஏற்கெனவே பல சோதனைகளைச் சந்தித்த மணிரத்னம் டென்ஷனின் உச்சத்துக்கே போய் விட்டாராம். ரஞ்சிதா 1992ல் பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, அர்ஜுனுடன் கர்ணா, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். ரஞ்சிதாவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. எனவே தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் அவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்தார். இங்கு அவருக்கு 3 வீடுகள் உள்ளனவாம். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, ஹபிபுல்லா சாலை வீட்டில் வசித்தார் ரஞ்சிதா. திருமணத்துக்குப் பின் மீண்டும் சில படங்கலில் நடித்தார். சினிமாவில் அவரை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார். மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியான போது, அவற்றை ஒரேடியாக மறுத்த ரஞ்சிதா, "எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக் கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார். இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. இந்தக் காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த சம்மரில் ராவணாவை வெளியிடும் நோக்கத்தில் பரபரப்பாக இயங்கிவரும் மணிரத்னம் ராவணா பட விஷயமாக ரஞ்சிதாவைத் தொடர்பு கொள்ள முடியாததால் டென்ஷனில் இருக்கிறார். ரஞ்சிதா விவகாரம் படத்தை பாதித்துவிடுமோ என்றும் கவலையில் உள்ளார். காரணம் இது மணிரத்னத்தின் சொந்தப்படம். ரஞ்சிதா விவகாரத்தோடு சேர்த்து 14 பெரிய பிரச்சினைகளை ராவணா படம் எதிர்கொண்டுள்ளதாம். ![]() நடிகை பிரீத்தி ஜிந்தாவை அலைய விட்ட போலீஸ் ![]() ![]() சொத்து பிரச்னை தொடர்பான புகாரை பதிவு செய்வதற்காக, போலீஸ் நிலையத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா 5 மணி நேரம் காத்திருந்தார். மும்பையில் ஜோகேஸ்வரி & விக்ரோலி இணைப்பு சாலையில், சினிமா தயாரிப்பாளரும் இயக்குநருமான கமால் அம்ரோகியின் ஸ்டூடியோ உள்ளது. இதில் நடிகை பிரீத்தி ஜிந்தாவும் முதலீடு செய்துள்ளார். இந்த ஸ்டூடியோ யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக கமால் அம்ரோகியின் மகன்கள் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்த பிரச்னையில் கமால் அம்ரோகியின் மூத்த மகன் சாந்தார் அம்ரோகி பக்கம் பிரீத்தி ஜிந்தா உள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக கார் ரோடு போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க பிரீத்தி ஜிந்தா சென்றுள்ளார். ஆனால், போலீசார் பல காரணங்களை கூறி பிரீத்தியை 10 நாள் அலைய வைத்துள்ளனர். சமீபத்தில் 5 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் காத்திருந்தும் பிரீத்தியின் புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர். இது குறித்து ‘ட்விட்டர்‘ இணையதளத்தில் பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டு, போலீசாரின் அலட்சிய மனப்பான்மையை கண்டித்துள்ளார். “நான் ஒரு சாதாரண பிரஜையாகத்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். ஆனால், போலீசார் நான் என்ன கூறுகிறேன் என்பதை கூட கேட்க விரும்பாதது போல நடந்து கொண்டனர். 10 நாட்கள் முயற்சித்தும் என்னால் கார் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்ய முடியவில்லை. சமீபத்தில் 5 மணி நேரம் என்னை காத்திருக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் என் புகாரை ஏற்க மறுத்து விட்டனர். சினிமா நடிகையான எனக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது’ என்று ட்விட்டர் இணையதளத்தில் பிரீத்தி எழுதியுள்ளார். இதற்கிடையே, இந்த பிரச்னை தொடர்பாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலை சந்தித்து பிரீத்தி முறையிட்டார். புகாரை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக பாட்டீல் உறுதியளித்தார். புதுப்பட டிரைலர் ![]() மலையாளத்தில் விருதுகளை குவிக்கும் கனிகா ![]() பழசிராஜா, பாக்ய தேவதா என இரண்டு மலையாளப் படங்களில் நடித்ததற்காக விருதுகளை குவித்துக் கொண்டிருக்கிறார் கனிகா. கிரிட்டிக் விருது, மலேசிய விருது என பட்டியல் நீள்கிறது. கேரள அரசு விருது பட்டியலிலும் பெயர் அடிபடுகிறது. கடந்த ஒரு மாதமாக கேரளாவில் தங்கியிருந்து கனிகா பார்த்த வேலையே விருது விழாக்களில் கலந்து கொண்டதுதான். அடுத்து ஜோஷி இயக்கத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ் படத்தில் நடிக்கிறார். இதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். எல்லாம் இருந்தும் கனிகாவுக்கு இருக்கும் ஒரே வருத்தம். தமிழ்த் திரையுலகம் ஏன் கண்டுகொள்வதே இல்லை என்பது தானாம். ![]() சினிமாவில் இப்போதும் தத்தளிக்கிறேன் - பிரீடா பின்டோ ![]() ![]() ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்தவர் பிரீடா பின்டோ. அவர் கூறியதாவது: ‘வார் ஆஃப் தி காட்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளேன். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்ததால் இந்த வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடவில்லை. சினிமாவில் முன்னேற அப்போதும் போராடினேன். வாய்ப்புகள் கிடைக்காமல் தத்தளித்தேன். இப்போதும் அதே நிலைதான். திறமை இருந்தால் வாய்ப்பு உனக்கு கிடைக்கும் என அம்மா கூறினார். அதன்படிதான் நடந்தது. இப்போது ஹாலிவுட்டில் நடிக்கிறேன். இந்தி சினிமாவில் நடிப்பதும் எனது நீண்ட நாள் ஆசை. அதுவும் இதுவரை நடக்கவில்லை. ஷாருக்கான் எனக்கு பிடித்த நடிகர். அவருடன் நடிக்க விரும்புகிறேன். இவ்வாறு பிரீடா பின்டோ கூறினார். ![]() பி.வாசு இயக்கத்தில் சதா ![]() ![]() ஜெயம் படத்தில் அறிமுகமான சதா, அந்நியன் உள்பட சில பெரிய படங்களில் நடித்தும் சதாவின் கேரியர் சாதாவாகவே இருக்கிறது. இறுதியாக அவர் எதிர்பார்த்த உன்னாலே உன்னாலே படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வரும் முயற்சியில் இருக்கிறார் பி.வாசு. இவர் கன்னடத்தில் இயக்கிய ஆப்தரக்ஷாவில் சதாவை நடிக்க வைக்க முயன்றிருக்கிறார். சில காரணங்களால் அது முடியவில்லை. கன்னடத்தில் நிறைவேறாமல் போன தனது ஆசையை இப்போது தமிழில் நிறைவேற்ற தீர்மானித்திருக்கிறார். ஆர்.கே.யை வைத்து இவர் இயக்கும் புலிவேஷம் படத்தில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவராக சதாவை நடிக்க வைக்க தீர்மானித்திருக்கிறார் வாசு. இன்னொருவர்? ஆர்.கே.யின் விருப்பம் சினேகா.
©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |