![]() "Kanavu Thozhil Salai" as your Homepage ![]() டாப் 10 படங்கள் 01. அசல் 02. ஆயிரத்தில் ஒருவன் 03. குட்டி 04. தமிழ்படம் 05. கோவா 06. ஜக்குபாய் 07. வேட்டைக்காரன் 08. தைரியம் 09. கதை 10. நாணயம் பாலு மகேந்திரா இயக்கத்தில் மீண்டும் ப்ரியாமணி ![]() ![]() அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் ஜோடி போட்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் நடித்த ப்ரியாமணி, மீண்டும் பாலு மகேந்திரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தில் ப்ரியாமணியின் கதாபாத்திரம் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் என பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. படத்தில் புதுமுகத்தை கதாநாயகனாக அறிமுகம் செய்ய பாலு மகேந்திரா முடிவு செய்துள்ளார். படத்திற்கு இசை இளையராஜா. இந்த வருடம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ![]() அவதார்-இந்தியாவில் ரூ.100 கோடி வசூல்
ஹாலிவுட் திரைப்படம் "அவதார்" வசூல், இந்தியாவில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது. அந்தப் படத்தை இங்கு திரையிட்டுள்ள பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விஜய் சிங் கூறியதாவது: இந்தியாவில் "அவதார்" இதுவரை ரூ.101 கோடி வசூலித்துள்ளது. அமீர்கானில் "3 இடியட்ஸ்" படத்துக்கு அடுத்தததாக இந்தப் படம் ஆதரவை பெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பம் ரிலீஸ் மற்றும் அது இல்லாத பிரின்ட் வெளியான தியேட்டர்களிலும் சமமான வசூல் கிடைத்துள்ளது.ஆங்கில பிரின்ட்கள் ரூ.50.5 கோடி வசூலித்தன. இந்தியில் ரூ.26 கோடி கிடைத்தது. தமிழ், தெலுங்கு மொழி பிரின்ட்கள் ரூ.24 கோடி வசூல் அளித்தன. உலகம் முழுவதும் இந்த படம் டிசம்பர் 18ல் வெளியானது. ஒரு மாதத்தில் சுமார் ரூ.6,000 கோடி வசூலை குவித்துள்ளது என்றார். நவீன தொழில்நுட்பத்தில் "அவதார்" படம் ரூ.1,200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. வெளியான ஒரே மாதத்தில் 5 மடங்கு அதிக லாபத்தை அள்ளித் தந்துள்ளது. அமீர்கானின் "3 இடியட்ஸ்" படம் சர்வதேச அளவில் வெளியான 19 நாளில் ரூ.315 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ![]() "விண்ணைத் தாண்டி வருவாயா" படத்தில் 2 க்ளைமேக்ஸ் ![]() ![]() ![]() கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்பு, த்ரிஷா நடித்த "விண்ணைத் தாண்டி வருவாயா" படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து, படத்திற்காக கவுதம் 2 க்ளைமேக்ஸை தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக கவுதம் இயக்கிய "வேட்டையாடு விளையாடு" படத்தில் ஜோதிகா கடைசியில் இறந்து விட்டு மாதரி காட்டிய க்ளைமேக்ஸை, பிறகு கமலும், ஜோதிகாவும் ஒன்று சேர்வது போல் மாற்று க்ளைமேக்ஸை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ![]() மம்மூட்டிக்கு ஆதரவாக திலகன் மீது மோகன் லால் பாய்ச்சல் ![]() மலையாள நடிகர் சங்கம், தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்துக்கு எதிராக திலகன் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மம்மூட்டியே காரணம் என்றும் சமீபத்தில் துபாயிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது; அதிலும் மம்மூட்டிக்கு தொடர்பு இருக்கிறது என்றும் திலகன் கூறி வருகிறார். ![]() ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட் விவாகரத்து! ![]() ![]() Angelina Jolie Topless - These bloopers are hilarious பிரபல ஹாலிவுட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி(34), பிராட் பிட்(46) இருவரும் விவாகரத்து பெற உள்ளனர். ஹாலிவுட் நடிகரான பிராப் பிட், ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித்’ என்ற படத்தில் நடித்த போது எஞ்சலினாவுடன் காதல் மலர்ந்து, சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று வருடத்துக்கு முன் ஜோலியின் அம்மா மரணமடைந்தார். இதனால் மனபாதிப்புக்குள்ளானாராம் ஜோலி. இதையடுத்து மனநல மருத்துவரை பார்க்க, பிராட் பிட் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்து வந்ததாகவும் இதையடுத்தே இவர்கள் பிரிந்துவாழ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக லண்டனில் வக்கீலை சந்தித்து பேசியுள்ளனர். இவர்களுக்கு 3 வளர்ப்பு குழந்தைகள் உட்பட 6 குழந்தைகள் உள்ளனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |