Original porn scenes in the film 'the Pakistani ban on the screen of "The Dirty Picture" | "The Dirty Picture" |Vidya Balan |Silk Smitha | Kanavu Thozhil Salai - Tamil Fortnightly Magazine | Cost Rs. 15 /-
yuganesan
12/8/2011
சில்க்ஸ்மிதா ("தி டர்ட்டி பிக்சர்") படத்தில் ஆபாச காட்சிகள்; பாகிஸ்தானில் திரையிட தடை
சென்னை, வியாழக்கிழமை, டிசம்பர் 08, 12:25 PM IST
இஸ்லாமாபாத், டிச.08-
தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த டர்டி பிக்சர் என்ற பெயரில் படமாக்கப்பட்டு இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார். இப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அங்கு 50 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது. வித்யா பாலனுக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே த டர்டி பிக்சர் படத்துக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் படத்தை பார்த்த பாகிஸ்தான் அதிகாரிகள் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி திரையிட தடை விதித்தனர்.
வித்யா பாலனுடன் நசுருதீன் ஷா, இம்ரான் ஹாஸ்மி, துச்சார் கபூர் ஆகியோர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் மிகவும் ஆபாசமாக படமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.