* ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டிய அவசியம் இல்லை: வீரப்பமொய்லி * காஷ்மீரில் தடையை மீறி நடந்த ஊர்வலத்தில் கலவரம் * இலங்கைக்கு சீனா ரூ.1840 கோடி நிதியுதவி * சிக்கியது செக்ஸ் புகாரில் : பதவியை இழந்தார் கவர்னர் : ஆந்திர அரசியலில் பரபரப்பு * பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: நிதின் கட்காரி * ராஜஸ்தானில் பாலம் விபத்து: மேலும் 19 பேரின் உடல்கள் மீட்பு

Download latha tamil font


"Kanavu Thozhil Salai" as your Homepage

"அண்மை செய்திகள்,27/12/2009,காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டிய அவசியம் இல்லை: வீரப்பமொய்லி


ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பிரச்சினையை சமாளிக்கும் திறமை காங்கிரசுக்கு உள்ளது என்று மத்திய சட்ட மந்திரி வீரப்பமொய்லி கூறினார்.



  • பொங்கலை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்


    'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வரும் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு, சென்னையிலிருந்து 80 சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க உள்ளது. தேவைப்படும் பட்சத்தில், அதிக பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் உள்ளது. அதேபோல, மேற்கண்ட இடங்களிலிருந்து சென்னைக்கு திரும்பி வருவதற்கு, வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் பயணிகளின் நலன் கருதி இயக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


    காஷ்மீரில் தடையை மீறி நடந்த ஊர்வலத்தில் கலவரம்


    காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதை மீறி, முகரம் பண்டிகையையொட்டி, ஷியா பிரிவு முஸ்லிம்கள் இன்று ஸ்ரீநகரில் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது, போலீசாருக்கும், ஷியா பிரிவினருக்கும் இடையே மோதல் எழுந்தது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்நடவடிக்கையில் 30 பேர் காயம் அடைந்தனர்.


    பென்னாகரம் தொகுதியில் வலம் வரும் கார்களால் பரபரப்பு


    பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் களை கட்டிய நிலையில் அரசியல் கட்சியினர் கார்களில் வலம் வருவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சியினர் கிராமங்களில் தற்போதே தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்விரு கட்சிகள் சார்பில் பல மாவட்டங்களில் இருந்து கட்சி பிரமுகர்கள் தேர்தல் பணிக்கு நேற்று முதல் வரத்துவங்கி விட்டனர். இதனால், பென்னாகரம் பகுதியில் கார்களில் பரபரப்பாக வரத்துவங்கி விட்டனர். ஏற்கனவே ஒகேனக்கல் சுற்றுலா செல்லும் வாகனங்கள் வரவு அதிகம் உள்ள நிலையில் தற்போது, அரசியல் கட்சியினர் வாகனங்கள் அதிகமாக வலம் வருவதால், கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    இலங்கைக்கு சீனா ரூ.1840 கோடி நிதியுதவி


    சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இலங்கையின் பொருளாதாரத்துறை மந்திரி ஜெயசுந்தர சீனாவின் வர்த்தக இணை மந்திரி சென் ஜியானை சந்தித்துப் பேசினார். இலங்கை அரசு நாட்டின் உள்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் ரூ. 1840 கோடி நிதியுதவி அளிக்க சீனா முடிவு செய்துள்ளது. இலங்கை எதிர்ப்பார்க்கும் அனைத்து உதவிகளை செய்ய சீனா தயாராக உள்ளதாக சென் ஜியான் உறுதியளித்து உள்ளார்.



  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை பரமபத வாசல் திறப்பு


    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரம பதவாசல் திறப்பு காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி காலை பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடக்கிறது. காலை 7மணிக்கு பரம பத வாசல் திறப்பும் தொடர்ந்து சுவாமி வீதிகளில் எழுந்தருளி ராப்பத்து மண்டம் சேருதல் நடக்கிறது. பின் திருவாய்மொழி துவக்கமும், அரையர் வியாக்கியானம், மாலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு மீண்டும் மூலஸ்தானம் வந்தடைதல் நடக்கிறது . ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் , அறங்காவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


    பாகிஸ்தான் விடுவித்த 100 மீனவர்கள் இந்தியா திரும்பினார்கள்


    கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஏராளமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானி சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 5 ஆண்டுகள் வரை சிறையில் வாடிய 100 பேர்களை மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. கராச்சியில் இருந்து லாகூர் கொண்டு வரப்பட்ட 100 மீனவர்களும், இன்று வாகா எல்லை வழியாக இந்திய பகுதிக்கு திரும்பினார்கள்.



  • கடல் கொந்தளிப்பு குறைந்தது : ரோந்து பணியோ மந்தம்


    கடல் கொந்தளிப்பு குறைந்தாலும்,கடல் வழி கண்காணிப்பு மந்த நிலையில் உள்ளது. விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டாலும்,இலங்கை மார்க்கமாக அன்னியர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், கடல் வழி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்காக மத்திய அரசு பல கோடி செலவில் ரோந்து கப்பல்கள் வழங்கி உள்ளன.கடல் வழி கண்காணிப்பில் கடற்படை, கடலோர காவல்படை,விமானப்படை, கஸ்டம்ஸார்,மரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது வரை இஞ்ஜின் ரிப்பேர் காரணமாக,நம் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்களை மட்டுமே இந்திய கடலோர காவல்படையினர் பிடித்துள்ளனர்.அத்தோடு கடல்வழி கண்காணிப்பு இலக்கு முடிந்து விட்டது. வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால்கடந்த சில தினங்களாக கடல் கொந்தளிப்பாக இருந்தது.இத்தருணத்தில் கடல் வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கடல் கொந்தளிப்பு குறைந்திருந்தாலும் ரோந்து பணி தொடங்கப்படாமலேயே மந்த நிலையில் உள்ளது.



  • ராஜஸ்தானில் பாலம் விபத்து: மேலும் 19 பேரின் உடல்கள் மீட்பு


    ராஜஸ்தானில் சம்பல் ஆற்றின் குறுக்கே, கோடா-உதய்பூர் ஆகிய நகரங்களுக்கு இடையே கட்டப்பட்டு வந்த பாலம் கடந்த 24-ந் தேதி இடிந்து விழுந்தது. இதில் பல தொழிலாளர்கள் உயிருடன் ஆற்றுக்குள் புதைந்தனர். இவர்களில் நேற்று வரை 7 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டு இருந்தன. இன்று மேலும் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால், சாவு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 16 பேரைக் காணவில்லை. எனவே, சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக கைதான 2 அதிகாரிகள், கோடாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.



  • கராச்சியில் கார் குண்டுவெடிப்பு : 19 பேர் காயம்


    பாகிஸ்தானின் கராச்சியின் பபோஷ் நகர் அருகே சுடுகாடு ஒன்றில் இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 5 பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட 19 பேர் படுகாயமடைந்தனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் அந்த வழியாக ஷியா பிரிவு முஸ்லீம்கள் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஷியா பிரிவு முஸ்லீம்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


    இன்றைய செய்திப் புகைப்படங்கள்












    சிக்கியது செக்ஸ் புகாரில் : பதவியை இழந்தார் கவர்னர் : ஆந்திர அரசியலில் பரபரப்பு


    செக்ஸ் புகாரில் சிக்கிய ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். உடல்நலன் கருதி தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    ஆந்திரமாநில கவர்னராக இருந்தவர் என்.டி.திவாரி(86). இவர், மூன்று பெண்களுடன் படுக்கையில் இருப்பது போன்ற வீடியோ காட்சி மற்றும்புகைப்படங்களை, "ஏ.பி.என்., ஆந்திர ஜோதி' என்ற தெலுங்கு சேனல், நேற்று முன்தினம் ஒளிபரப்பியது. இதனால், நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பு எழுந்தது. வீடியோ காட்சிகள் வெளியான ஒரு மணி நேரத்தில், "ஆந்திர ஐகோர்ட்டில், இந்த காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது' என, கவர்னர் மாளிகை சார்பில் தடை உத்தரவு பெறப்பட்டது. மேலும், வீடியோ காட்சிகள் போலியானவை என்றும் தெரிவிக்கப்பட்டன. "கவர்னரின் புகழைக் குலைக்க சதி செய்ததாக, குறிப்பிட்ட சேனலின் மீது வழக்கு தொடரப்படும்' என்றும் தெரிவிக்கப் பட்டது. ஏற்கனவே தெலுங்கானா பிரச்னையில் மாட்டிக் கொண்டு தவித்து வரும் காங்கிரசுக்கு, புதிதாகக் கிளம்பிய இப்பிரச்னை மிகவும் கவலை அளித்துள்ளது.

    திவாரி மீதான செக் ஸ் புகாரைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம், பா.ஜ., உட்பட பல கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தின. பெண்கள் அமைப்புகளும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நேற்று கூட ஐதராபாத்தில் ராஜ்பவனுக்கு எதிரில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டன. திவாரி தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உண்மையானவையே என, புலனாய்வு நிறுவனங்களும் மத்திய அரசுக்கு தகவல் கொடுத்தன. அதனால், திவாரியின் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப் படலாம் அல்லது அவர் பதவி விலகலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ற வகையில், மத்திய அரசும், திவாரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான அறிக்கையை தரும்படி, ஆந்திர தலைமைச் செயலர் ரமாகாந்த் ரெட்டியை கேட்டுக் கொண்டது.

    இந்த சூழ்நிலையில், ஆந்திர கவர்னர் திவாரி, நேற்று மாலை தன் கவர்னர்பதவியை ராஜினாமா செய்தார். உடல்நலத்தை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள் ளார். ஏற்கனவே, தெலுங்கானா பிரச்னையில் மத்திய அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், தன்னாலும், பிரச்னைகள் வர வேண்டாம் என்ற எண்ணத்தில் திவாரி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. கடந்த மாதம் 29ம் தேதி முதல் தெலுங்கானா விவகாரத்தால், ஆந்திர மாநிலம் அல்லோகலப் பட்டு வந்ததால், ஏற்கனவே கவர்னர் திவாரியை மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது. திவாரிக்குப் பதிலாக, முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரில் ஒருவரை கவர்னராக நியமிப்பது குறித்து ஆலோசித்து வந்தது.

    இந்நிலையில் திவாரி, செக்ஸ் புகாரில் சிக்கி வெளியேறியுள்ளார். உ.பி., மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் முதல்வராகவும், காங்கிரஸ் தலைமை யிலான முந்தைய மத்திய அரசுகளின் அமைச்சராகவும் இருந்த திவாரி, ஏற்கனவே இதுபோன்ற பாலியல் புகார்களில் சிக்கியுள்ளார். காங்கிரசை சேர்ந்த உஜ்வாலா சர்மா என்பவரின் மகன் ரோகித் சேகர் என்பவர், திவாரி தான் தனது தந்தை என்று டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். சரியான காலத்தில் மனு தாக்கல் செய்யப்பட வில்லை என்று காரணம் காட்டி, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












    பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: நிதின் கட்காரி


    பா.ஜனதா கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற நிதின் கட்காரி மும்பையில் பா.ஜனதா சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:- என்னை போன்ற சாதாரண கட்சி தொண்டர் கூட தேசிய தலைவரானதன் மூலமாக, ஒரு வித்தியாசமான அரசியல் இயக்கம் என்பதை பா.ஜனதா நிரூபித்து இருக்கிறது. நம்மால் வெற்றி பெற முடியும். இதற்கு முன், நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். எதிர் காலத்தில் தொண்டர்கள் அனைவரும் முயற்சியுடன் கடுமையாக உழைத்தால் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நாடு முழுவதும் பா.ஜனதாவை வலுப்படுத்த முழு முயற்சி எடுப்போம்'' என்றார்.


    பிலிப்பைன்சில் படகு கவிழ்ந்த விபத்தில் 25 பேர் மாயம்


    பிலிப்பைன்ஸ் நாட்டின் பட்னகாஸ் நகரில் இருந்து 88 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த எம்வி பலோனா-9 என்ற சொகுசுப் படகு தெற்கு மணிலா அருகே கவிழந்து விபத்துக்குள்ளானது. அதிரடி மற்றும் மீட்புப்படையினரின் துரித செயலால் 63 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 25 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 1987ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் கப்பல் ஆயில் டேங்கருடன் மோதிய விபத்தில் 4 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


    Bookmark and Share

    டிசம்பர் மாதம் இருபத்தி ஆறாம் நாள் அண்மை செய்திகள்




    ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578
    No part of this website may be reproduced or used in any form without permission

    DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

    send your comments and corrections