* சுனாமி நினைவு தினம் : இன்று அனுசரிப்பு * திண்டுக்கல் மாவட்டத்தில் கலைவிழா இன்று துவக்கம் * அமெரிக்காவில் அல்குவைதா பயங்கரவாதி கைது * அரியலூர் அருகே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு: போலீசார்-பொதுமக்கள் மோதல் * ஆளில்லாத செக்போஸ்ட்: கடத்தல், ஊடுருவல் அதிகரிப்பு * இந்தியாவுக்குள் 5 முக்கிய தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை

Download latha tamil font


"Kanavu Thozhil Salai" as your Homepage

"அண்மை செய்திகள்,26/12/2009,காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,


சுனாமி நினைவு தினம் : இன்று அனுசரிப்பு


சுனாமி பேரலை தாக்கியதன் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் அஞ்சலி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • அரியலூர் அருகே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு: போலீசார்-பொதுமக்கள் மோதல்


    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள கோக்குடி கிராமத்தில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் கற்களை வீசியதால் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அதிரடிப்படை போலீசார் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. கற்களை வீசி தாக்கியதாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.


    குருவாயூரில் இன்று களபாட்டம் நிகழ்ச்சி


    ஆண்டுக்கு ஒரு முறை குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நடைபெறும் சந்தன அபிஷேகம் (களபாட்டம்) இன்றுநடக்கிறது. பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சாமூதிரி மன்னர் சார்பாக, சந்தன அபிஷேகம் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை நிறைவு நாளில் நடத்தப்படுவது வழக்கம். இவ்வாண்டுக்கான சந்தன அபிஷேக நிகழ்ச்சி இன்று பிற்பகல் உச்சிக்கால பூஜைக்கு முன் துவங்கும். இதற்காக மைசூரில் இருந்து சிறப்பாக தருவிக்கப்பட்ட சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவற்றை பன்னீரும் சேர்த்து அரைக்கப்பட்டு அபிஷேகத்திற்கான சந்தனம் தயாரிக்கப்படும். கோவில் தந்திரி ஷேனாஸ் வாசுதேவன் நம்பூதிரிபாடு உச்சிக்கால பூஜைக்கு முன்பாக குருவாயூரப்பனுக்கு சந்தன அபிஷேகம் செய்விப்பார்.


    இந்தியாவுக்குள் 5 முக்கிய தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை


    இந்தியாவுக்குள் 5 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்து இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அணு மின் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களை உன்னிப்பாக கவனிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    ஆளில்லாத செக்போஸ்ட்: கடத்தல், ஊடுருவல் அதிகரிப்பு


    முதுகுளத்தூர் அருகே கன்னிராஜபுரத்தில் ஆளில்லாத 'செக்போஸ்ட்'டால் கடத்தல், ஊடுருவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். கடற்கரை பகுதிகளில் 'செக் போஸ்ட்கள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் எல்லையான கன்னிராஜபுரத்திலும் செக் போஸ்ட் உள்ளது. ஆனால் இங்கு போலீசார் இருப்பதில்லை. இதனால் ஊடுருவல், கடத்தல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செக் போஸ்ட் வெளியே போலீசாருக்காக போடப்பட்ட 'சேர்' கூட கவனிவிப்பாரற்று உள்ளது. ஆளில்லாத 'செக் போஸ்ட்டால் இப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட போலீஸ் துறை உரிய நடவடிக்கை எடுத்து, ஆளில்லாத 'செக் போஸ்ட்டில் போதுமான போலீசாரை நியமிக்க முன்வர வேண்டும்.



  • முத்தரப்பு தொடரில் தெண்டுல்கருக்கு ஓய்வு


    வங்காளதேசத்தில் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியில் தெண்டுல்கர் இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஓஜா நீக்கப்பட்டு அமித் சர்மா சேர்க்கப்பட்டு இருக்கிறார். இஷாந்த் ஷர்மா, பிரவீன்குமார் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஒருநாள் தொடரில் காயம் காரணமாக நீக்கப்பட்ட யுவராஜ்சிங் உடல் தகுதி பெற்று விட்டதால் முத்தரப்பு தொடருக்கு திரும்புகிறார். முத்தரப்பு தொடரில் தெண்டுல்கர் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் பிறகு நடக்கும் வங்காளதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    திண்டுக்கல் மாவட்டத்தில் கலைவிழா இன்று துவக்கம்


    திண்டுக்கல் மாவட்டத் தில் 300 கலைஞர்கள் பங் கேற்கும் கிராமிய கலைவிழா இன்று முதல் ஐந்து நாட்கள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து நடத் தும் கலைவிழா இன்று துவங்கிறது. திண் டுக்கல்லில் மணிக் கூண்டு அருகேயும், பழநியில் பெரியார் திடலிலும், ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் ரோட்டிலும், நிலக் கோட்டையில் திறந்தவெளி கலையரங்கிலும், வேடசந்தூரில் ஆத்துமேடு அண்ணா திடலிலும் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: இந்த கலைவிழாவில் 300 கலைஞர்கள் பங்கேற் கின் றனர். எழுபது பேர் ஆந் திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத் தில் இல்லாத கலைஞர்கள் மட்டும் வெளி மாவட்டங் களில் இருந்து வந்துள்ளனர். அனைத்து இடங்களிலும் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.



  • ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிபுசோரன் முதல்-மந்திரி ஆக பா.ஜனதா ஆதரவு


    ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்க வில்லை. 18 இடங்களைப் பெற்று உள்ள சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. ஆனால், தான் முதல்-மந்திரி ஆக எந்த கட்சி ஆதரவு அளிக்குமோ அந்த கட்சியை சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க தயார் என்று சிபுசோரன் நிபந்தனை விதித்துள்ளார். சிபுசோரனின் நிபந்தனையை ஏற்று, அவரை முதல்-மந்திரி ஆக்க பா.ஜனதா முன் வந்துள்ளது. இந்த தகவலை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஹேம்லால் முர்மு தெரிவித்துள்ளார். இவர்களுடன் ஜார்கண்ட் மாநில அனைத்து மாணவர் ïனியன் கட்சியும் சிபுசோரனை ஆதரிக்க முன் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.



  • அமெரிக்காவில் அல்குவைதா பயங்கரவாதி கைது


    அமெரிக்காவின் டெட்ராய்ட் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தை வெடிகுண்டுகள் மூலம் தகர்க்க முயன்ற அல்குவைதா பயங்கரவாதியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் நைஜீரியாவைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பிற்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.



  • ஆந்திராவில் 13 மந்திரிகள் ராஜினாமா


    தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திராவில் 13 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். பதவி விலக வேண்டாம் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்த, முதல்-மந்திரி ரோசய்யா மேற்கொண்ட முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. தெலுங்கானா பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாலும், 13 மந்திரிகள் ராஜினாமா செய்து இருப்பதாலும், ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது. ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது பற்றி முதல்-மந்திரி ரோசய்யாவுக்கு மத்திய அரசு தகவல் தெரிவித்து விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.


    இன்றைய செய்திப் புகைப்படங்கள்












    மத்திய அரசுக்கு தெலுங்கானா போராட்டக்குழு கெடு : திங்கள் கிழமைக்குள் முடிவை அறிவிக்க கோரிக்கை


    "தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் விஷயத்தில் வரும் திங்கள் கிழமைக்குள் உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில், காலவரையற்ற "பந்த்'திற்கு அழைப்பு விடுப்போம்' என, மத்திய அரசுக்கு தெலுங்கானா போராட்டக் குழு, கெடு விதித்துள்ளது.

    தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதை அடுத்து, ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித் துள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, 48 மணி நேர "பந்த்'திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஐதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா பகுதி முழுவதும் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, நேற்று, "பந்த்' வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஐதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா பகுதிகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், உஸ்மானியா உள்ளிட்ட முக்கிய பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள் நேற்றும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவில் காங்., அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் 13 பேர், முதல்வர் ரோசய்யாவை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினர். இதற்கு பின், மாநில உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி உள்ளிட்ட அமைச்சர்கள் 13 பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர். மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பொன்னாலா லட்சுமய்யா கூறுகையில், "தெலுங்கானா மாநிலம் அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், எங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளோம். ராஜினாமா கடிதங்களை, கட்சித் தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்' என்றனர். ராஜினாமாக்கள் தொடர்வதை அடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசின் முரண்பட்ட நடவடிக்கை குறித்து, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இதில்,"தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தனது உறுதியான முடிவை திங்கள் கிழமைக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் மேலும் தீவிரமாகும். செவ்வாய்க் கிழமையில் இருந்து, காலவரையற்ற "பந்த்' நடத்துவோம்' என, அரசுக்கு கெடு வித்துள்ளது. போராட்டக் குழுவின் இந்த அறிவிப்பால், ஆந்திராவில் வன்முறை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    "தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு பின் வாங்கவில்லை' என, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தெலுங்கானா விவகாரம் குறித்து, மத்திய சட்ட அமைச்சரும், ஆந்திர மாநில காங்., மேலிட பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி கூறியதாவது: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியுள்ளதாக கூறுவது தவறு. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு, தனது தீவிரத்தை குறைக்கவில்லை. ஆந்திர முதல்வர் ரோசய்யா நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், தனி மாநிலம் அமைப்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தன. இதனால், தான் தெலுங்கானா மாநிலம் அமைக்க முயற்சி எடுக்கப்படும் என, மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டம் வெடித்ததும், பெரும்பாலான கட்சிகள், தாங்கள் ஏற்கனவே தெரிவித்த முடிவில் இருந்து "பல்டி' அடித்து விட்டன. இதனால், பிரச்னை சிக்கலாகி விட்டது. ஜனநாயக நடைமுறைகளுக்கு உட்பட்டு, விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே இந்த பிரச்னைக்கான தீர்வை எட்ட முடியும். ஒரே இரவில், இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு விட முடியாது. இவ்வாறு, வீரப்ப மொய்லி கூறினார்.

    இதுகுறித்து, ஆந்திர மாநில காங்., எம்.பி.,ஒருவர் கூறுகையில்,"மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார். சந்திரசேகர ராவ் மீது வழக்கு: இதற்கிடையே, பொதுக் கூட்டம் ஒன்றில் தரக்குறைவாகவும், உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் பேசியதாக டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ் மீது, கிருஷ்ணா மாவட்ட போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணா மாவட்டம், நந்திகமா கோர்ட் உத்தரவின் பேரில், ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












    தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு


    'வடகிழக்கு பருவ மழை காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இலங்கை கடலுக்கு சென்று விட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்வது படிப்படியாகக் குறைந்தது. ஆனாலும், வடகிழக்கு பருவ மழை தொடர்வதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 4, பாம்பனில் 3 செ.மீ., மழை பதிவாகியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பகல் முழுவதும் வெயில் அடித்தாலும், காலை மற்றும் மாலையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. 'வடகிழக்கு பருவ மழை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், தென்மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு மாவட்டங்களில் வறண்ட வானிலையே நீடிக்கிறது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும்' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


    ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் கலவரம் நீடிப்பு


    தெலுங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அமைத்துள்ள கூட்டு நடவடிக்கை குழு தெலுங்கானா பகுதியில் 48 மணி நேரம் முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. முதல் நாளான நேற்று முழுஅடைப்பின் போது பல இடங்களில் கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 2-வது நாளான இண்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால் முழுஅடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சந்திரசேகர ராவ் அறிவித்தார். என்றாலும் தெலுங்கானா பகுதியில் கலவரம் நீடித்தது. சாலை மறியல், தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. ஐதராபாத் நகரில் குறிப்பிடத்தக்க வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் பாதுகாப்பு கருதி முழு அளவில் பஸ்களை இயக்கவில்லை.


    Bookmark and Share

    டிசம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் அண்மை செய்திகள்




    ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578
    No part of this website may be reproduced or used in any form without permission

    DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

    send your comments and corrections