![]() மணிரத்னத்தின் அடுத்த படம்! ![]() ராவணன் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்ற செய்தி ஒருபுறம் இருக்க... இன்னொருபுறம் தனது அடுத்தப்பட வேலைகளில் பிஸியாகி விட்டார் டைரக்டர் மணிரத்னம். அவர் ஏற்கனவே அமீர்கானுடன் இணைந்து இயக்க திட்டமிட்டிருந்த லஜ்ஜா படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் மணி. இது ஒரு காதல் கதை. ஆனால் ஒரே ஒரு மாற்றம். ஏற்கனவே கரீனா கபூர் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவரை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை தேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமீர்கான் தனது அலுவலகத்தில் கதை கேட்டு, திரைக்கதையை படித்து தேர்வு செய்ய ஒரு கதை இலாகாவை உருவாக்கியிருக்கிறார். இந்த கதை இலாகாவில் அமீர்கானுக்கு நெருக்கமானவர்கள் இடம் பெற்றுள்ளனர். தினமும் அமீர்கானுக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும், திரைக் கதை ஸ்கிரிப்டையும் படித்து இவர்கள் பரிந்துரைத்த பின்னரே அமீர்கான் தேர்வு செய்வார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, 044-64541144 +91-9841523276 +91-9043023578 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |