![]() படத்தில் நடிக்கிறார் த்ரிஷா அம்மா ![]() நடிகர் கமலஹாசன், த்ரிஷா நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மன்மதன் அம்பு”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனும் நடிக்கிறாராம். த்ரிஷாவின் சினிமா வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்துவருபவரான உமா கிருஷ்ணன், தன் மகளின் திரை வாழ்க்கையைத் திட்டமிட்டு வழிநடத்தி செல்வது மூலம் சினிமா வட்டாரத்தில் பிரபலமடைந்தவர், தன் இளமையான அழகாலும் த்ரிஷாவிற்கு அக்கா போலுள்ளார் என்று எல்லோரலும் பாராட்டப்பட்டவர். இதனால் அவரை சினிமாவில் நடிக்க வைத்துவிட வேண்டுமென்று பலர் முயன்றும் மறுத்துவிட்டார். இந்நிலையில் த்ரிஷா அம்மாவிடம், ‘உங்களுக்கு பொருந்துற மாதிரி ஒரு கேரக்டர் இருக்கு நீங்கள் நடிக்கிறீர்களா?” என்று கே.எஸ்.ரவிகுமார் கேட்க வழக்கம் போலவே மறுத்துவிட்டார். அருகில் இருந்த கமல் வற்புறுத்தவே நடிப்பதற்கு சம்மதித்தாராம் உமா கிருஷ்ணன். தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றுவரும் மன்மதன் அம்பு படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவின் அம்மாவும் கலந்துகொண்டுள்ளார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, 044-64541144 +91-9841523276 +91-9043023578 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |