![]() கொள்கையை தூக்கிப் போட்ட நயன் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் அழுத்தமாகத் தடம் பதித்த நயன்தாராவிற்கு முதலில் வாய்ப்புகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. மெல்ல மலையாள சினிமாவில் ஙுழைந்து பின் தமிழுக்கு வந்தபிறகு அவரின் வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. வாய்ப்புக்கள் இல்லாமல் சினிமாவில் சாதித்திட வேண்டும் என்ற கனவோடு இருந்தபோதும், அப்புறம் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று எங்கு நோக்கினும் நயன், நயன், நயன் என்று அவர் புகழ் பரவி பல லட்சம், கோடியென சம்பாதித்தபோதும் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளை மறுத்தே வந்தார். “நான் பயன்படுத்தாத ஒரு பொருளைக்காட்டி தினமும் இதைதான் பயன்படுத்துகிறேன் என்று சொல்லி மக்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை” என்று விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்த நயன்தாரா இப்போது அந்த கொள்கையைத் தூக்கித் தூரப்போட்டுவிட்டாராம். இப்போது முன்னர் தன்னை விளம்பரப் படங்களில் நடிக்க அணுகிய விளம்பரப் படக்காரர்களிடம் போன்போட்டு நடிக்க சம்மதித்துள்ளாராம். தன் கொள்கையை விட்டுக்கொடுத்ததிற்கு காரணம் பிரபுதேவாவின் பணக்கஷ்டம்தானாம். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, 044-64541144 +91-9841523276 +91-9043023578 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |