![]() த்ரிஷாவை தேடி வரும் பாலிவுட் படங்கள் ![]() ![]() ![]() தென்னிந்திய திரைப்பட ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழும் த்ரிஷா, சமீபத்தில் பாலிவுட் படம் ஒன்றில் அக்ஷை குமாருக்கு ஜோடியாக நடித்தார். கட்டா மிட்டா என்னும் அந்த படம் தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெளி வருவதற்கு முன்னரே மற்றொரு பாலிவுட் படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகி உள்ளார். தற்போது புதுப்பட வேலையில் பிசியாக உள்ள த்ரிஷாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஜோடி ஸ்மிதா பட்டேல்- ராஜ் பாபரின் மகன் பிரதிக் பாபர் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக் தானாம். இதன் இந்தி ரீமேக்கிலும் தானே நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். த்ரிஷா ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக த்ரிஷாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்தி ரீமேக் படத்தையும் கெளதம் மேனனே இயக்குகிறார் என்பது கூடுதல் தகவல். இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தில் பிரதிக் நடிக்க உள்ளார். ஆனால் த்ரிஷா, தற்போது தமிழில் கமல்ஹாசனின் மன்மத அம்பு பட சூட்டிங்கில் பிசியாக உள்ளார். அதே சமயம் கட்டா மிட்டா படத்தின் வெற்றியை கொண்ட த்ரிஷாவிற்கு மும்பையில் இருந்து அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக, மன்மத அம்பு படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் 5 நாட்கள் அனுமதி பெற்றுக் கொண்டு மும்பை சென்றுள்ளார் த்ரிஷா. மும்பையில் கட்டா மிட்டா படம் ரிலீசாகி 5 நாட்கள் கழித்தே த்ரிஷா, அங்கு சென்றுள்ளார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, 044-64541144 +91-9841523276 +91-9043023578 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |