![]() வருது வருது எந்திரன் வருது- செப்டம்பர் 10 ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() செப்டம்பர் 10 த்தில் ’எந்திரன்” திரைக்கு வருகிறது. கண்டேன் சீதையை என்பது போல இப்படி சொன்னால்தான் ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கும். சன் பிக்சர்ஸின் மெகா தயாரிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா நடிப்பில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் எந்திரன் படத்திற்கு இப்படியொரு அறிமுகம் தேவையில்லைதான். ஆனால் பின்வரும் செய்திகள் ரஜினி ரசிகர்களுக்கு தேவைதான். எந்திரன் படத்தின் டாக்கி போர்ஷன் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரெடக்ஷன், கிராபிக்ஸ் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை வேலைகளும் எதிர்பார்த்தப்படி முடிந்துவிட்டால் எந்திரன் செப்டம்பர் 10 திரைக்கு வருவது நிச்சயம் என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் தரப்பினர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, 044-64541144 +91-9841523276 +91-9043023578 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |