"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ரகசிய திருமணம் - மறுக்கும் பூஜா












சரண் இயக்கத்தில் ஜே ஜே படத்தில் அறிமுகமான பூஜா உள்ளம் கேட்குமே, அட்டகாசம், பட்டியல், தம்பி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த ஒருவருடன் ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி பரவியிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியவதாவது:

’நான் ரகசிய திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. என்னை பற்றி யாரோ வதந்தியை பரப்புகிறார்கள். இந்த வதந்தி என் காதுகளுக்கும் வந்தது. இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக இந்தியாவிலும், இந்தியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக இலங்கையிலும் வதந்தியைப் பரப்பி இருக்கிறார்கள்.

அப்பா எனக்காக மாப்பிள்ளை தேடி வருகிறார். இந்தியாவில்தான் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தை அப்பாவிடமே ஒப்படைத்துவிட்டேன்” என்று கூறினார்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections