"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

உலக நாயகி ஆகிறார் பிரியங்கா சோப்ரா










உலக அழகி என்ற பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ராவுக்கு உலக நாயகி ஆகும் ஆசை வந்து விட்டது.

தமிழ் சினிமா மூலம் திரையுலகில் நுழைந்த பிரியங்கா, இபு்போது பாலிவுட்டின் முன்னணி நாயகிகள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.

‌பேஷன் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சந்தோஷத்தில் மிதக்கும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

தனக்கு பிடித்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க விரும்பும் பிரியங்கா, ஒரே படத்தில் பல கேரக்டர்களில் நடிக்கவும் ஆசைப்பட்டார்.

இதனையறிந்த இந்திப்பட டைரக்டர்கள் பலர் அதற்கேற்ற கதைகளுடன் பிரியங்காவின் வீட்டுக் கத‌வை தட்டியிருக்கிறார்கள்.

அதில் சாட் கூன் மாப் என்ற படத்தில் நடிக்க பச்சைக் கொடி காட்டிய அம்மணி, உற்சாகத்துடன் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறாராம்.

படத்தில் ப்ரியங்கா 18 வயது பேத்தி கேரக்டரில் தொடங்கி 68 வயது பாட்டி கேரக்டர் வரை நடிக்கப் போகிறாராம்.

தசாவதாரம் படத்தில் 10 கேரக்டரில் நடித்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசனைப் போல உலக நாயகியாக வலம் வர‌ வேண்டும் என்பதுதான் ப்ரியங்காவின் விருப்பமாம்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections