"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

அனுஷ்காதான் வேண்டும் அடம்பிடிக்கும் சிம்பு
























தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற வேதம் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்கிறார். ராதா கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் டோலிவுட்டின் பெரிய ஸ்டார்களான அல்லு அர்ஜீன், மனோஜ் மாஞ்சு மற்றும் அனுஷ்கா நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் ஆர்.பி. செளத்திரியின் மகன் ஜித்தன் ரமேஷ் தயாரிக்கிறார்.

இதுவரை ரீமேக் மோகத்தில் சிக்காத சிம்பு தெலுங்கு வேதம் படத்தைப் பார்த்துவிட்டு உடனே சம்மதித்துவிட்டார். தெலுங்கில் அல்லு அர்ஜீன் செய்த கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு அவசர அவசரமாக போட்டோ சூட்டையும் முடித்துவிட்டாராம். தனக்கு ஜோடியாக தெலுங்கு வேதத்தில் கதாநாயகியாக நடித்த அனுஷ்காவேதான் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்.

ஜீலை 5 ஆம் தேதி ‘போடா போடி” படத்திற்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்த சிம்பு, ரீமேக் படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பதை அறிந்து அவரின் அடுத்த படம் போடா போடியா? இயக்குனர் லிங்குசாமி படமா? அல்லது இந்த ரீமேக் படமா? என்று குழப்பத்தில் உள்ளனர் கோடம்பாக்கத்தினர்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections