"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

அட்வான்ஸ் வாங்கினார் ரீமா














ரீமா சென் தீராத விளையாட்டுப் பிள்ளையில் நடிக்கிறாரா, இல்லையா என்பதை பங்குச் சந்தை எழுமா, வீழுமா என்ற ரீதியில் கோலிவுட்டில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு சுமார் இரண்டு வருடங்கள் காட்டில் காய்ந்த நிலா போல வீணாகிக் கிடந்தது அவரது கால்ஷீட். கேட்பவர்களிடமெல்லாம் "கதைதான் முக்கியம். நல்ல கதை இருந்தால் நடிப்பேன்" என்றார் ரீமா, ஏதோ அவார்டு பட நடிகையைப் போல! இந்தச் சூழலில்தான் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடிக்க அழைத்தார் விஷால்.

இருவருக்கும் முன்பே நெருக்கம் என்பதால் கதையைக் கேட்ட ரீமா, "மூன்றில் ஒருவரா? நான் மாட்டேம்ப்பா" என்று ஒதுங்கிக்கொண்டார். த்ரிஷாவும் அப்படியே! பிரஸ் மீட்டில்கூட "இப்போதைக்கு ஸ்ரேயாவை மட்டும்தான் புக் பண்ணியிருக்கோம். விரைவில் மற்றவர்கள் யார் என்பதை சொல்வோம்" என்றார். இப்போது லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால் ஒரு வழியாக ரீமாவைச் சம்மதிக்க வைத்துவிட்டார்களாம். "உங்கள் கேரக்டர் ஒருபோதும் டம்மியாகாது. அதற்கு நாங்கள் உத்தரவாதம்" என்ற சத்தியத்தையும் சேர்த்துக் கொடுத்திருப்பதால் ரீமா அட்வான்ஸ் வாங்கிக்கொண்டார் என்கிறது கோலிவுட் குருவி. ஆனால், உண்மையில் கொடுக்கப்பட்டது மேற்படி விஷயத்திற்காம். கலிகாலம் !.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections