![]() நொந்தசாமி ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() தயாரிப்பாளர் தாணுவின் பேச்சுக்கள் எப்படியிருக்கும் என்பது தமிழ் சினிமா அறியாததல்ல. ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், அந்தப் படத்தின் இயக்குனரைப் பற்றியோ, கதாநாயகனைப் பற்றியோ "இந்தத் தம்பி என்கிட்ட வந்தது நான் பூர்வ ஜென்மத்திலே பண்ணிய புண்ணியம்" என்பார். ஆனால், படம் ரிலீஸான பிறகு, "போன பிறவியிலே எவ்வளவு பாவம் பண்ணியிருந்தால் இவன் எங்கிட்ட வருவான்?" என்பார் கவலையோடு.
"இந்தியாவிலேயே பெரிய டைரக்டரா இந்தத் தம்பி வரும். வேணும்னா எழுதி வச்சுக்கோங்க. அப்படி ஒரு டைரக்ஷன் திறமை அவருகிட்ட இருக்கு" என்று தாணு சொன்னது லேட்டஸ்டாக நடந்த கந்தசாமி ஆடியோ வெளியீட்டு விழாவில். ஆனால் கடந்த சில வாரங்களாக இருவருக்கும் இடையே உரசல் ஆரம்பித்துவிட்டதாம். முன்பெல்லாம், தம்பி கொஞ்சம் வந்திட்டுப் போங்களேன் என்று தாணு சொன்ன அடுத்த நிமிடம் பறந்தடித்துக்கொண்டு ஓடி வருவாராம் கந்தசாமி இயக்குனர். இப்போது ஏதாவது முக்கியமான காரணத்திற்காக அழைத்தால்கூட, நீங்க நம்ம ஆபிசுக்கு வந்திட்டு போயிருங்களேன் என்கிறாராம். இதனால் அடையாறில் இருக்கும் ஆபிசுக்கு அபிபுல்லா சாலையிலிருந்து ஓடுகிறார் தாணு. அது மட்டுமல்ல, போட்ட பட்ஜெட்டையெல்லாம் தாண்டி எங்கோ போய்விட்டதாம் செலவு. அது குறித்தும் செம கோபத்தில் இருக்கிறார் தாணு. |