"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

நமீதாவின் திடீர் மாற்றம்


















திரும்பிய இடமெல்லாம் நமீதா ஸ்டில்களாக தெரிந்த காலம் போயே போச்சு. நாளிதழ்களும், வார இதழ்களும் போட்டி போட்டு அவரது ஸ்டில்களைப் பிரசுரித்த காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. நமீதா தற்போது நடித்து வரும் ஒன்றிரண்டுத் படங்களை தவிர சொல்லும்படியான புதிய ஒப்பந்தங்கள் ஏதும் இல்லை. காரணம், நமீதா இருந்தால் படம் ஹிட் என்ற இலக்கணம் மாறிப் போனதுதானாம்.

லேட்டஸ்டாக இவர் சுந்தர். சி. யுடன் நடித்த இரண்டு படங்களும் பணால். ஜெகன் மோகினியைத் தவிர சொல்லிக்கொள்ளும்படி படங்கள் அமையாமல் போனதற்கு மற்றொரு காரணம், இவர் கேட்கிற சம்பளம். இதற்கிடையில் காது குத்து, கடை திறப்பு விழா என்று கல்லா கட்டிக்கொண்டிருந்த நமீ, அதையும் மெல்ல மெல்லக் குறைத்துவிட்டாராம். ஏரியாவை மாற்றினால் என்ன என்ற யோசனையுடன் வேற்று மொழியில் ஸ்டில்களை உலவ விட்டிருக்கிறாராம்.

பீரோ இடம் மாறினா பொருள் கைகூடும் என்பது வாஸ்து!


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections