"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

‘மோதி விளையாடு’ம் விஜய் டி.வி.யின் அதிரடி




மோதிவிளையாடு, குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும், ஆரண்ய காண்டம், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து படங்களுக்கான தொலைக்காட்சி உரிமையை அதிரடியாக வாங்கியிருக்கிறது விஜய் டி.வி. கமல் நடிகும் ‘உங்களில் ஒருவன்’ படத்தின் உரிமை வாங்கும் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. வழக்கமாக சன் டி.வி., கலைஞர் டி.வி. ஆகியவை தமிழ்ப் படங்களின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமையை வாங்க கடும்ப் போட்டி போடுவது அனைவருக்கும் தெரிந்தது.

‘இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக’ என்று அதிரும் அறிவிப்புகளோடு விசேஷ நாட்களில் புத்தம்புது திரைப்படங்களை தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்புகின்றன . கோடிகள் விளையாடும் இந்த ‘ஒளிப்பரப்பு உரிமை போரில்’ இதுவரை ஒதுங்கி இருந்தது விஜய் டிவி.

நீயா? நானா?, உங்களில் யார் பிரபுதேவா, ஏர்டெல் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு?, நடந்தது என்ன?, ஜோடி நம்பர்ஒன்... போன்ற நிகழ்ச்சிகளில் நேயர்களை இழுத்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற வைத்துக்கொண்டிருந்தது. மற்ற சேனல்கள் இந்த நிகழ்ச்சி வடிவங்களை அப்படியே வேறு பெயர்களில் தயாரிக்கிற போட்டிகளும் நடைபெற்றன.

படங்களின் ஒளிப்பரப்பு உரிமை வாங்குவதில் விஜய் டி.வி. அவ்வளவாக அக்கறை காட்டாமல் இருந்து வந்தது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய தரமான படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தொடர்ந்து பல படங்களை வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஸ்டார் குரூப் டி.வியான ஸ்டார்விஜய் போட்டியில் இறங்கியுள்ளதால் தமிழ்ப் படத் தாயாரிப்பாளர்கள் ஆர்வமாக வரவேற்கின்றனர்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections