![]() மகள் சௌந்தர்யாவின் அடுத்த தயாரிப்பில் ரஜினி? ![]() ![]() ![]() ![]() ![]() சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘ஆக்கர் ஸ்டுடியோ’ எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்திய கார்ப்ரேட் நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியதும் ஹாலிவுட் தயாரிப்பாளர்களும் இந்திய சினிமா தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். பிரபல ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் ‘ஆக்கர் ஸ்டுடியோ’ மீது கவனத்தில் கொண்டது. பலத்த போட்டிகளைத் தாண்டி ‘வார்னர் பிரதர்தஸுடன்’, சௌந்தர்யா இணைந்து படங்கள் தயாரிக்கும் செய்தி இந்தியா சினிமா வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஏ.ஆர். முருகதாஸ், கௌதம் மேனன், ராதாமோகன், லிங்குசாமி என பெரிய இயக்குநர்களிடம் பேரம் படியாமல் வெங்கட் பிரபுவை ஓ.கே. பண்ணார் சௌந்தர்யா. புதுமுக இயக்குநர்களின் ஐந்து கதைகளைத் தேர்வு செய்து கடந்த ஜனவரி 14ஆம் தேதி 10 படங்களுக்கான பூஜை போடுவதாக இருந்தது. எதிர்ப்பார்த்த அளவில் கதைகள் எதுவும் அமையாமல் போனதால் உடனடியாக படத்தயாரிப்பு தொடங்க ‘வார்னர் பிரதர்ஸ்’ தயாராக இல்லை. வெங்கட் பிரபுவின் படம் மூன்று மாதம் காலம் ஏற்கனவே தள்ளிப்போய்விட்டது. எனவே ‘கோவா’ படத்தை தன்னுடைய ஆக்கர் ஸ்டுடியோ மூலம் தொடங்குவது என்று முடிவு செய்து ஷுட்டிங் ஆரம்பித்துவிட்டார் சௌந்தர்யா. ‘வார்னர் பிரதர்ஸ் மொத்தமாக விலகிக்கொண்டது’ என்ற செய்தி அழுத்தமாக காற்றில் கலந்தாலும், ‘இல்லவே இல்லை’ என்று மறுக்கிறது சௌந்தர்யா வட்டாரம். ‘ஹாலிவுட் ஸ்டைல் சினிமா தயாரிப்புக்கும், நமக்கும் பெரிய நடைமுறை வித்தியாசம் இருக்கு. பட்ஜெட் முதல் ஷுட்டிங் தேதி வரை ஒட்டுமொத்த படத்துக்கும் சேர்த்து ப்ளானிங் தெளிவாக இருந்தால் மட்டுமே ஹாலிவுட்டில் ஷுட்டிங் போவார்கள். நம்ம ஊர் மாதிரி ஒரு வாரத்து ஒரு ஷெட்யூல் போறதெல்லாம் அவங்களுக்கு புரியவே இல்லை. ‘கோவா’ படத்தில் எங்கள் பலம் என்னவென்று காட்டிய பிறகு வார்னர் பிரதர்ஸ் தானாக எங்களைத் தேடி வருவார்கள். அடுத்தப் படமெல்லாம் அவர்களோடு இணைந்துதான் தயாரிப்போம்’ என்று நம்பிகையோடு சொல்கிறார்கள். எல்லாவற்றையும் மௌனமாக பார்த்துக்கொண்டு அவ்வப்போது தன் மகளின் செயல்களுக்கு அங்கீகாரமாக சின்ன புன்னகையை மட்டும் தருகிறாராம் ரஜினி. எந்திரனுக்கு அடுத்து ரஜினி நடிக்கும் படத்திற்கு மகளே தயாரிப்பாளர் ஆகாலாம் என்று பட்சிகள் பலமாக சொல்கின்றன. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, 044-64541144 +91-9841523276 +91-9043023578 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |