"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஒரு தயா‌ரிப்பாள‌ரின் தன்னம்பிக்கை


























'அடடா என்ன அழகு' படத்தைப் பார்த்த அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தியது, படத்தின் ஆடம்பர செலவு.ஆகாஷ் ஜெய் படத்துக்கு இப்படியொரு ஆர்ப்பாட்டமா?

இந்த செலவுக்கு பின்னணியில் இருப்பவர் ஒரு முன்னாள் திரையரங்கு ஆபரேட்டர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்புங்கள், இது நூறு சதவீத நிஜம். அந்த தன்னம்பிக்கை மனிதர், அடடா என்ன அழகு படத்தின் தயா‌ரிப்பாளர் திருப்பூர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி.

இவர் பள்ளிப் படிப்பையே தாண்டாதவர். எம்.‌ஜி.ஆர். படங்கள்தான் இவரது தன்னம்பிக்கை டானிக். பதிமூன்று வயதில் திரையரங்கு ஆபரேட்டர் பணி. காலையில் வேறு வேலைகள் செய்துவிட்டு மாலையில் வியர்க்க விறுவிறுக்க ஆபரேட்டர் பணி செய்வாராம்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வெளிநாடுகளுக்கு பனியன் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இதனிடையில் திரையரங்கு ஒன்றையும் சொந்தமாக்கியிருக்கிறார். இத்தனை உயரங்களை அடைந்த பின்பும் அவரது இளமைக்கால சினிமா கனவு துரத்த எடுத்தப் படம்தான் அடடா என்ன அழகு.

டி.எம்.ஜெயமுருகன் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. அதனால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படத்தை எடுத்திருக்கேன். இப்போது ‌ரிசல்டுக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லும் ராமசாமி பேசாமல் தனது கதையையே படமாக்கியிருக்கலாம். தன்னம்பிக்கை தரும் படமாக அமைந்திருக்கும்.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections