"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

புலியாகும் புன்னகை இளவரசி












பூ ஒன்று புயலானதை கேள்விப்பட்டிருக்கிறோம்.புன்னகை புலியாகுமா? ஆகியிருக்கிறதே...!

'பவானி' படத்தில் ரோப் பைட், சம்மர் சாலட் என சதிராடிக் கொண்டிருந்தார் சினேகா.சி‌ரித்துக் கொண்டிருந்தவரை இப்படி ஆ‌க்சனில் வறுத்தெடுக்கலாமா என்று ‌இயக்குனர் ஜி.கிச்சாவிடம் கேட்டதுக்கு அட்டகாசமாக ‌சி‌ரிக்கிறார்.

விஜயசாந்திக்குலேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படம்தான்பவானி என்ற பெய‌ரில் ‌‌‌ரீமேக்காகி வருகிறது படத்தின் இயக்குனர்கிச்சாவின் முந்தையப் படமான ' தீ' யும் போலீஸ் கதைதான். பவானியில்சினேகாவின் வேடமும் போலீஸ் அதிகா‌ரிதான். அடுத்து அர்ஜுனை வைத்து இயக்கப்போகும் 'கள்ளன்' படத்தின் பிரதான கேரக்டர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.

தொடர்ந்து போலீஸ் கதைகளையே எடுக்கிறீர்களே?

“ரவுடி, தாதான்னு சமீபகாலமா திருடன் கதைதான் அதிகமா வந்துகிட்டிருக்கு. என்னோடபடங்கள் போலீஸ் கதைகளா புது டிரெண்டில் இருக்கு.ஆனாலும், எல்லாவகைபடங்களும் கொடுக்கிற இயக்குனராக இருக்கணும் என்பதுதான் என்னோட விருப்பம்.”

புன்னகை இளவரசியை ஆ‌க்சன் ஹீரோயினாக்கியிருப்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

“சினேகான்னாலே சி‌ரிப்புதான். அதேநேரம் அப்படிப்பட்ட ஒரு பெண் ஆக்ரோஷமான வேடம் பண்றது புதுசா இருக்கும். மென்மையான பெண் என்ற இமே‌ஜ் கொண்ட சினேகா கோபமாகநடிக்கும்போது, அந்த கதாபாத்திரத்துக்கு கூடுதல் அழுத்தம் கிடைக்கும். இதையெல்லாம் யோசித்துதான் சினோகாவை ஒப்பந்தம் செய்தேன்.”


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan,
044-64541144
+91-9841523276
+91-9043023578
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections