"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


"அச்சமுண்டு அச்சமுண்டு" பேய் கதை இல்லை பிரசன்னா தகவல்






























































"அச்சமுண்டு அச்சமுண்டு" பேய் கதை படமல்ல என்றார் பிரசன்னா. அவர் கூறியதாவது:

இப்படத்தை நியூயார்க்கில் டைரக்ஷன் பயிற்சி பெற்ற அருண் வைத்யநாதன் இயக்கியுள்ளார். முழு பட ஷூட்டிங்கும் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் செட்டிலான தமிழ் குடும்பத்தை சுற்றி நடக்கும் கதையிது. அங்கு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கேரக்டர் எனக்கு.

எனது மனைவியாக சினேகா, ஆறு வயது மகள், ஹாலிவுட் நடிகர் ஜான் ஷே ஆகியோர்தான் படத்தின் முக்கிய கேரக்டர்கள். குடும்ப பின்னணியில் நடக்கும் த்ரில்லான விஷயங்கள்தான் கதை. மற்றபடி இந்த பட தலைப்பை பார்த்து இது பேய் கதை என எண்ண வேண்டாம்.

முழு படமும் அமெரிக்காவில் படமானாலும் ஆங்கில வசனங்கள் அதிகம் இருக்காது. தமிழ் வசனங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம். வழக்கமான சினிமா பாணியில் டூயட், சண்டைக்காட்சிகள் இருக்காது. முதல்முறையாக ரெட் ஒன் டிஜிட்டல் கேமராவில் படமாக்கியுள்ளோம்.

ஹாலிவுட்டை சேர்ந்த கிரில் பெர்லிச் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ஜூலையில் படம் ரிலீசாகும். இவ்வாறு பிரசன்னா கூறினார்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections